ஈசானிய குளத்தில் ஈசனின் தீர்த்தவாரி..!திருவண்ணாமலையில் கோலாகலம்..!

Published by
kavitha

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில் தீர்த்தவாரியும் ஒன்று. ஈசானிய குளம், அய்யங் குளம், தாமரை குளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் அருணாசலேஸ்வரர் கலந்து கொள்வார். அதன்படி, திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

இதனை முன்னிட்டு காலையில் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளத்துடன் அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்திற்கு புறப்பட்டார். அங்கு தீர்த்தவாரி நடந்தது. அப்போது அருணாசலேஸ்வரர் சூலத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை வரை அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்பினார்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கோவில் வரலாற்று படி திருவண்ணாமலை பகுதியை வல்லாள மகாராஜா  ஆண்டு வந்ததாகவும்,இந்த  மகரராஜாவுக்கு நெடுநாட்களாக குழந்தை பாக்கியாம் இல்லாத நிலையில் திருவண்ணாமலை ஈசனை  நினைத்து மன முருகி வேண்டினார். கனவில்  காட்சியளித்த ஈசன் இந்த பிறவியில் உனக்கு குழந்தை பாக்கியம் இல்லை அதனால் என்னை உன் மகனாக நினைத்து கொள்.இந்த பிறவியில் நானே உனது மகன் என்று கூறிய ஈசனின் வாக்கு படியே அவரையே மகனாக பாவித்து ஆட்சியை வந்துள்ளார்.

தைப்பூசதன்று அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்தில் நடைபெறுகின்ற  தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு மாலையில் மேளதாளங்கலுடன் கோவிலுக்கு திரும்பி செல்வார்.

அன்றைய நிகழ்வின் போது  போர்க்களத்திற்கு சென்ற மகராஜா இறந்த செய்தியானது அருணாசலேஸ்வரர்  தெரிவிக்கப்படுகிறது.தன்னை மகனாக நினைத்து பாசத்தை பொழிந்த  வல்லாள மகாராஜாவின்  இறந்த செய்தியை கேட்டு மேளதாளங்கள் இல்லாமல் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாக இன்று நடைபெற்ற  தீர்த்தவாரியில் மேளதாளங்கள் உடன் கலந்து கொண்டு தீர்த்தவாரியை முடித்துவிட்டு அருணாசலேஸ்வரர் மாலை கோவிலுக்கு செல்லும் போது வல்லாள மகாராஜா இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து  மேளதாளங்கள்  இல்லாமல்  அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்பினார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago