த்மிழ் கடவுளான முருகப்பெருமானின் முதற்படை வீடாக கருதப்படும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 8 தேதியே கொடியேற்றத்துடன் தெப்பத் திருவிழா தொடங்கியது.
தொட்ர்ந்து நடைபெற்று வரும் திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை சுவாமி தங்க சப்பரத்திலும் இரவில் பல வேறு வாகனங்களில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்தருளி நகரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில் திருவிழாவின் 9ம் நாளான நேற்று காலை தெப்ப முட்டு தள்ளுதல் விழாவுடன் தை கார்த்திகை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முதலிய இசைக்கருவிகள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக தெப்பக்குளத்திற்கு வந்தார்.அவர் வந்தவுடன் தெப்ப முட்டு தள்ளுதல் நடைபெற்றது.
“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா …. வீரவேல் முருகனுக்கு அரோகரா“ என்ற பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு நடுவே சுவாமி உலா வந்த தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரானது கீழ ரத வீதி, பெரிய ரத வீதி, மேல ரத வீதி,தென்றலாய் மெல்ல, மெல்ல ஆடி ,வடக்கு ரத வீதி வழியாக தேர் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…