சூரிய, சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் இரண்டு நாட்கள் மூடப்படும்..

Published by
Dhivya Krishnamoorthy

சூரிய மற்றும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மற்றும் நாடு முழுவதும் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் 60 கோவில்கள் பக்தர்கள் வழிபாட்டிற்காக அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 8 ஆகிய தேதிகளில் மூடப்படும்.

அக்டோபர் 25 ஆம் மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே அக்டோபர் 25-ந்தேதி 9 மணிநேரத்துக்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணியளவில் 11¼ மணிநேரம் மூடப்படும்.

நவம்பர் 8 ஆம் தேதி மதியம் 2.39 மணி முதல் மாலை 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. எனவே நவம்பர் மாதம் 8-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.40 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரை 10 மணிநேரம் மூடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி கோவிலில் அனைத்து விஐபி பிரேக் தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் குறிப்பிட்ட இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும். இருப்பினும், இரண்டு நாட்களிலும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் அனுமதிக்கப்படும்.

Recent Posts

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

3 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

23 hours ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago

பணமோசடிக்கு செக் வைத்த பிஎஸ்என்எல்! ஏர்டெல், ஜியோவை ஓவர்டேக் செய்த புதிய அம்சம்!

சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…

1 day ago

தீவிரமடையும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்., அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்.!

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…

1 day ago

ஹெஸ்பொல்லா தலைவர் நஸ்ரல்லாவின் ‘வாரிசு’ இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் பலி.?

இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…

1 day ago