ஏழுமலையான் கோவில் கருடசேவை..!!குமரிமுனையில் நடத்த திட்டம்..!
திருப்பதி ஆலயத்தில் நடைபெரும் பல்வேறு வகையான சேவைகளில் மிகவும் முக்கியமானது கருட சேவை ஆகும்.
திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது 5 வது நாள் கருட சேவையானது நடத்தப்படும்.இதில் கருடன் மீது அமர்ந்து ஏழுமலையானும் பரந்தாமனை கையில் தாங்கியவாறு கருடனுடன் வீதியுலா வரும் காட்சியை காண கண்கோடி வேண்டும். இதை பார்த்து தரிசிப்பதற்காகவே நாட்டின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு படையெடுத்து வந்து ஏழுமலையானை தரிசிக்கின்றனர் .
திருப்பதியில் நடைபெறும் கருட சேவையை குமரிமுனை திருப்பதி ஆலயத்திலும் நடத்துவதற்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் திருமலையில் எந்த மாதம் எந்த தேதியில் எந்த நேரத்தில் கருட சேவை நடத்தப்படுகிறதோ அதே மாதத்தில் அதே நேரத்தில் கன்னியாகுமரி முனையிலும் இந்த கருட சேவை நடத்தப்பட உள்ளது சிறப்பானது ஆகும்.