கிழக்கே உதிக்கும் சூரியனை ரதமாக கொண்ட ஏழுமலையானின் ரதசப்தமி இந்நாளில்..!
திருப்பதியில் ஆண்டு தோறும் ந்டைபெறுகின்ற ரதசப்தமி என்று அழைக்கப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான ரதசப்தமி விழாவானது பிப்ரவரி 12 தேதி நடைபெறுகிறது.
திருப்பதியில் அன்று மட்டும் ஒரே நாளில் 7 வாகன சேவைகளில் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வருவார்.இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று திருப்பதி தேவஸ்தானம் குறிப்பிடுகிறது.இந்த ரதசப்தமியை தரிசிக்க திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த சிறப்பான விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.இதன்படி திருப்பதி ஏழுமலையான் காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்திலும் . காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும். காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும்.
மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் மற்றும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி நிகழ்வும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனத்திலும் மற்றும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனத்திலும் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும் எழுந்தருளி வாகன சேவைகள் நடைபெறுகிறது.