வெற்றிவேல்!… வீரவேல்!… சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்!

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நிகழ்வு நடைபெற்றது.

Tiruchendur Temple

தூத்துக்குடி -கந்த சஷ்டி விழாவானது கடந்த  நவம்பர் இரண்டாம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கிய நிலையில் ஆறாம் நாளாளின்  முக்கிய நிகழ்வான இன்று மாலை  சூரசம்காரம் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக நடைபெற்றது.

குறிப்பாக, முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் இன்று மாலை கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்றது.

இந்த சூரசம்கார நிகழ்வை ஒட்டி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்பட்டு அபிஷேகங்கள் நடந்தது. ஆண்டுதோறும் இந்த நிகழ்வு நடைபெற்றாலும் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் ஆரவாரத்துடன் இந்த கந்த சஷ்டி விழாவை காண திருச்செந்தூரை நோக்கி வருகின்றனர்.

அந்த வகையில், முருகனின் வருகையை எதிர்பார்த்து கடற்கரையில் காத்திருந்த  லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை கண்டதும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று வெற்றி முழக்கத்துடன் வரவேற்றனர்.

இந்த அரோகரா முழக்கம் கடல் அலையைத் தாண்டியும் எதிரொலித்தது. இதனைத் தொடர்ந்து மனித தலைக்கும் கடல் அலைக்கும் இடையே சூரபத்மனை வதம் செய்தார் ஜெயந்திநாதர். சூரபத்மனை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் முருகப்பெருமான் ஆட்கொண்டார்.

சூரசம்ஹாரம்:

  • முதலில் யானை தலையுடன் வரும் சூரபத்மனை சம்ஹாரம் செய்தார் ஜெயந்திநாதர்.
  • இரண்டாவதாக சிங்கம் முகம் கொண்ட சிங்கமுகாசுரன் வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்.
  • யானை முகம் கொண்ட கஜமுகாசுரனின் தலை கொய்யப்பட்டதால் சிங்க முகத்துடன் அவதாரம் எடுத்த சூரபத்மனையும் வதம் செய்த பின், மூன்றாவதாக சூரபத்மனையும் வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்.
  • சூரபத்மனை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் ஆட்கொண்டார் முருகப்பெருமான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்