நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை..! கிரிவலம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றால் அற்புதமான புண்ணியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத ஐதீகம்.
அப்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஒன்றாக கிரிவலம் செல்வார்கள்.இந்த மாதம் பவுர்ணமியானது வருகின்ற 20 தேதி வருகின்றது.பக்தர்கள் எப்போது கிரிவலம் செல்லலாம் என்பது குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன் படி நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.17 மணிக்கு தை பவுர்ணமி தொடங்கி மறுநாள் திங்கட்கிழமை காலை 11.08 மணி வரை தொடர்கிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது மிக உகந்த நேரமாகும்.