மகா சிவராத்திரி அன்று தூங்காமல் இருக்க முடியாதவர்கள் இந்த பதிவை படிங்க..!

maga sivarathiri

மகா சிவராத்திரி 2024-  மாசி மாதம் 25ஆம் தேதி [மார்ச் 8 , 2024] அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் நாம் விரதம் மேற்கொள்ளும் முறை,  மகா சிவராத்திரியின் சிறப்பு, அன்று நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது, கண் விழிக்க முடியாதவர்கள் என்ன செய்வது என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

சிவன் என்றாலே முதலும் முடிவும் இல்லாதவர். அம்பிகைக்கு நவராத்திரி சிறப்பு என்றால் சிவனுக்கு சிவராத்திரி சிறப்புகுரியது , அதிலும் இந்த மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக  அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

மகா சிவராத்திரியின் சிறப்புகள்:

பார்வதி தேவி உலக மக்களை காப்பாற்ற சிவபெருமானை நோக்கி தவமிருந்த நாளாக கருதப்படுகிறது. உமாதேவி சிவனிடம் ஆகமம் உபதேசம் பெற்ற நாளாகவும் கூறப்படுகிறது. இந்த நாளில் தான் அர்ஜுனன் பாசுபதம்  என்ற வஸ்திரத்தை பெற்றார். சிவபெருமான் மார்க்கண்டேயனுக்காக எமதர்மனை சம்ஹாரம் செய்த நாளாகவும் கூறப்படுகிறது. கண்ணப்பன் தன் கண்களை சிவபெருமானுக்கு பொருத்தி முக்தி அடைந்த நாளும் இந்த  நாள்தான்.

விரதம் மேற்கொள்ளும் முறை:

மகா சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவில் நடக்கும் 4 கால பூஜைகளை கண்டு சிவனை நோக்கி தியானம் செய்ய வேண்டும். மறுநாள் மாலை வீட்டில்  சிவனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்துதான் விரதத்தை முடிக்க வேண்டும்.

பலன்கள்:

இந்த நாளில் விரதம் இருந்தால் அவர்களின் தீய எண்ணங்கள் அகலும் என்றும் கர்மவினை குறையும் எனவும் கூறப்படுகிறது ,ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு அதில் சிவனை வணங்கினால்    முக்தி கிடைக்கும் என கூறப்படுகிறது .

அன்று நாம் செய்யக்கூடாதவைகள்:

சிவன் ராத்திரி அன்று தூக்கம் வராமல் இருப்பதற்காக செல்போன் பார்ப்பது, டிவி பார்ப்பது கேளிக்கைகள் பார்ப்பது, வீண் பேச்சுக்கள் பேசுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அன்று சிவனின் நாமத்தை மட்டுமே கூறிக் கொண்டு தியானத்தை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் அதற்கான பலனை பெற முடியும்.

கண் விழிக்க முடியாதவர்கள்:

ஒரு சிலருக்கு உடல்நிலை காரணமாகவும், வேறு ஏதேனும் சில காரணங்களாகவும் கண் முழிக்க முடியாது என்றால் அன்று இரவு ஒரு மணி நேரம் சிவபெருமானின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும், அந்த ஒரு மணி நேரம் உங்களால் எத்தனை முறை உச்சரிக்க முடியுமோ அத்தனை முறையும் கூறலாம்.

ஆகவே மாதந்தோறும் சிவன் ராத்திரி வந்தாலும் வருகின்ற மாசி மாத இந்த சிவன் ராத்திரியை நாம் முறையாக கடைப்பிடித்து ஈசனின் முழு அருளையும் பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்