நாள்பட்ட தோல் வியாதியை குணப்படுத்தும் திருக்கொடுங்குன்றநாதர் ஆலயம்…!

kodunkundranathar temple

பொதுவாக நோய் வாய் பட்டால் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும் ஆனால் மருத்துவமனைக்கு எல்லாம் மருத்துவமனை இறைவனின் சன்னிதானம்தான்  தான். மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத வியாதிகளுக்கு கூட இறைவனின் மகத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை . அந்த வகையில் இன்று நாம் திருக்கொடுங்குன்றநாதர் ஆலயத்தின் சிறப்பையும் பல ஆச்சரியமூட்டும் தகவல்களையும் தெரிந்து கொள்வோம்.

திருத்தலம் அமைந்துள்ள இடம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிங்கம் புணரி அருகில் பிரான்மலை என்ற ஊரில் அமர்ந்து அருள் பாலிக்கும் திருக்கொடுங்குன்றநாதர் குயில் அமுது நாயகி என்ற திருத்தலம் அமைந்துள்ளது.மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில்  இருந்து நேரடியாக பேருந்து உள்ளது .

திருத்தலத்தின் சிறப்பு

கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் ஆட்சி செய்த இடமாகும். தேவாரத்தில் 276 ஸ்தலங்களில் இது 195 வது திருத்தலம் ஆகும். இக்கோவில் மூன்று அடுக்குகளை கொண்ட சிவ ஆலயமாக திகழ்கிறது. பாதாளம், பூலோகம், கைலாசம் என்ற மூன்று அடுக்குகளில் சிவபெருமான் காட்சி தருகிறார்.

பாதாளம்

மலைக்கு அடிவாரத்தில் சிவபெருமான் கொடுங்கொன்ற   நாதர், குயிலமுது  நாயகி என்ற திருநாமத்தோடு அருள் பாலிக்கிறார்கள்.

பூலோகம்

பூலோகம் என்று சொல்லப்படும் மத்தியில் உள்ள கோவிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதர் அருள்பாலிக்கிறார்.

கைலாயம்
மலைக்கு உச்சியில் கைலாயம் எனப்படும் மேலடுக்கில் உள்ள சன்னதியில் மங்கை பாகர் அம்பிகையுடன் இணைந்து அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி தருகிறார். இது குடைவரை கோவிலாகும்.மற்ற கோவில்களில் இறைவன் சன்னதிக்கு எதிரே நந்தி அமைந்திருப்பது போல இங்கு கிடையாது. சிவபெருமான் அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளிக்கும் போது நந்தி தேவர் மத்தாளம் வாசித்ததாகவும் அதனால் இங்கு நந்தி அமைக்கப்படவில்லை எனவும் கூறுகின்றனர். மேலும் இங்கு கொடி மரமும் ,பலிபீடமும் கிடையாது.

நெய்வேத்தியம்
குறிஞ்சி நிலத்தில் அமைந்துள்ளதால் இங்கு தேன் மற்றும் தினை மாவு, பச்சரிசி மாவில் செய்த பொட்டுக்கடலை நெய்வேத்யம்  படைக்கிறார்கள்.

குஷ்ட விலக்கி சுனை

இங்குள்ள தீர்த்தம் குஷ்ட விலக்கி  சுனை என்று அழைக்கப்படுகிறது, நாள்பட்ட தோல்வியாதி உள்ளவர்கள் இச் சுனை  நீரில் குளித்து சிவபெருமானை வழிபட்டால் எப்பேர்ப்பட்ட தோல் வியாதியாக இருந்தாலும் நீங்கும் என்பது ஐதீகம்.

இப்படி சிறப்பு வாய்ந்த எம்பெருமானின் ஆலயத்தை வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து பரிபூரண திருவருளை பெற்றுச் செல்லுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்