திருக்கார்த்திகை 2024- அறியாமல் செய்த பாவத்தை போக்கும் பரணி தீபம் எப்போது தெரியுமா ?

பரணி தீபம்  சிறப்புகள் ,பலன்கள் மற்றும் பரணி தீபம் ஏற்ற வேண்டிய நேரம் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

bharani deepam (1)

பரணி தீபம்  சிறப்புகள் ,பலன்கள் மற்றும் பரணி தீபம் ஏற்ற வேண்டிய நேரம் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை :கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்று பரணி தீபம் .இதை எம தீபம் என்றும் கூறுவதுண்டு . இந்த கார்த்திகை மாதத்தில்  பரணி தீபம் ,கார்த்திகை தீபம், பஞ்சராத்திர  தீபம் ஆகிய மூன்று நாட்கள் தீபங்கள் ஏற்றப்படுகிறது .அதில் முதலாவதாக ஏற்றப்படுவது தான் பரணி தீபம்.பரணி தீபம் பாவங்களை நீக்கி முன்னோர்களின் ஆசியை பெற்று தரும் என நம்பப்படுகிறது . கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படுவது தான் பரணி தீபம்.

பரணி தீபம் ஏன் ஏற்ற வேண்டும் தெரியுமா ?

கடோபநிசதம் என்ற நூலில் பரணி தீபம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது . இதற்கென ஒரு புராண கதையும் சொல்லப்பட்டுள்ளது. நசிகேதன்   தந்தை நசிகேதனை உயிருடனே எமதர்மராஜாவிடம் கொடுத்து விட்டார். உயிரோடு சென்ற நசிகேதன்  எம ராஜாவிடம் அங்கு மனிதர்கள் படும் துயரத்தைப் பார்த்து இது நியாயமா என கேட்கிறார் ..அப்போது தர்மத்தை பற்றி நசிகேதனிடம் எமதர்மராஜா எடுத்துரைக்கிறார்.

பூலோகத்தில் மனிதர்கள் செய்த பாவத்திற்கு தண்டனையாக இங்கு அனுபவிக்கிறார்கள் என கூற அதற்கு நசிகேதன் ஆனால் பலரும் தெரியாமல் செய்திருக்கிறார்களே  என்று கூற அதற்கு எமராஜா இதற்கு பல புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது .ஆனால் மனிதர்கள் கேட்பதில்லை என கூறுகின்றார். இதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என நசிகேதன் கேட்கிறார்.. அப்போது எம ராஜா மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் பற்றியும் கார்த்திகை மாதம் வரும் பரணி தீபத்தை  பற்றியும் கூறுகிறார்.

எவர் ஒருவர் பரணி தீபத்தை ஏற்றி  வழிபடுகிறார்களோ அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் மேல் உலகில் நலன்கள் கிடைக்கும். இதைக் கேட்ட நசிகேதன் பூலோகத்திற்கு செல்ல அனுமதி கேட்கிறார். நசிகேதன் பூலோகத்திற்கு வந்து மனிதர்களிடம் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் பரணி தீபம் பற்றியும் விளக்குகிறார்.

பரணி தீபம் ஏற்றுவதால் நாம் அறியாமல் செய்த பாவம் பிறர் மனதை புண்படுத்திய பாவங்கள் நீங்குகிறது. நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய ஒரு கடமையாகவும் இந்த பரணி தீபம் கூறப்படுகிறது .மேலும்  பஞ்சபூத நலன்களையும் பெற்று தருகிறது.  கார்த்திகை மாதம் தேவர்களுக்கு விடிவதற்கு முன்னால் இருக்கும் காலமாகும். இந்த மாதம் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் வெளிச்சம் கிடைக்கும் என்றும் சாஸ்திரத்தில்  சொல்லப்பட்டுள்ளது.

பரணி தீபம் 2024;

பரணி தீபம் திருவண்ணாமலையில் டிசம்பர் 13ஆம் தேதி அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்படுகிறது. ஆனால் வீடுகளில் டிசம்பர் 12ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் ஏற்றி வழிபட வேண்டும். குறைந்தது ஐந்து தீபங்களாவது ஏற்ற வேண்டும். மண் விளக்கு, பஞ்சுதிரி மற்றும் நெய் அல்லது நல்லெண்ணெயில் ஏற்றுவது சிறப்பாக கூறப்படுகிறது.

குறிப்பாக முதலில் வாசலில் விளக்கேற்றி பிறகு பூஜை அறையில் விளக்கேற்றுவது தான் சரியான முறை எனவும் சொல்லப்பட்டுள்ளது. மண் விளக்குகள் புதிதாக வாங்கி விளக்கேற்றுவது சிறப்பாகும் .ஏனென்றால் மண்ணை நம்பி இந்த தொழிலை நம்பி பல குடும்பங்கள் வாழ்கின்றது .புதிதாக நாம் வாங்கி விளக்கேற்றும் போது அவர்களின் வாழ்வும் பிரகாசிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்