திருக்கார்த்திகை 2024-வீட்டில் விளக்கேற்றும் முறை..!

கார்த்திகை தீபம் வீட்டில் எவ்வாறு  ஏற்ற வேண்டும் எந்த எண்ணெய்களை பயன்படுத்தவே கூடாது என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

karthigai deepam (1)

கார்த்திகை தீபம் வீட்டில் எவ்வாறு  ஏற்ற வேண்டும் எந்த எண்ணெய்களை பயன்படுத்தவே கூடாது என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை :கார்த்திகை மாதம் என்பது தேவர்களுக்கு அர்த்த ஜாமம் ஆக சொல்லப்படுகிறது .அதாவது விடிவதற்கு முந்திய காலமாகும் .பண்டைய காலத்தில் தீபாவளி கார்த்திகை அன்று கொண்டாபட்டதாகவும் கூறப்படுகிறது . ராமர் வனவாசம்  முடிந்து வீடு திரும்பிய போது மக்கள் தீபம் ஏற்றி வரவேற்றதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த திருக்கார்த்திகை அன்று வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்றலாம் எங்கெல்லாம் ஏற்றுவது என்பதை பார்க்கலாம்.

வீட்டில் விளக்கேற்றும் முறை ;

கார் இருள் சூழ்ந்த கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி வெளிச்சத்தில் புதிதாக மண் அகல் விளக்கு வாங்கி வீடு முழுவதும் ஏற்றுவதால் பஞ்சபூதங்களையும் ஒன்றிணைத்து இயற்கையை வழிபடுவதாக சொல்லப்படுகிறது.  இது  குறிப்பாக மண்ணிற்கு நன்றி தெரிவிப்பதையும் ,இறைவன் ஜோதி வடிவானவர் என்பதையும்  உணர்த்துகிறது.

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றிய பின்பு தான் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் .வீட்டில் அனைத்து இடங்களிலுமே தீபம் ஏற்ற வேண்டும். குறைந்தது விளக்குகள் 30 நிமிடங்கள்  எரிய விட வேண்டும். முதலில் வீட்டு வாசலில் விளக்கேற்றி பிறகு வீட்டிற்குள் ஏற்ற வேண்டும்.

பூஜை அறையில் விளக்கேற்றி வெளியில் எடுத்துச் செல்லக்கூடாது.  குறைந்தது 27 விளக்குகளாவது ஏற்ற வேண்டும் .இது 27 நட்சத்திரங்களை குறிக்கிறது. விளக்குகள் உடைந்திருந்தாலோ அல்லது கருமை படிந்திருந்தாலோ அவற்றை பயன்படுத்தக் கூடாது. முடிந்தவரை புதிய  மண் விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.

மண் அகல் விளக்கில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி கொண்டு விளக்கேற்ற வேண்டும். இதுவே சரியான முறையாகவும் சொல்லப்படுகிறது .மேலும் பசு நெய்யில்  மகாலட்சுமி வாசம்  செய்வதாகவும் இது வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்க செய்யும் என்றும்  நம்பப்படுகிறது.

வீட்டு வாசலில் இரண்டு விளக்குகளும், சுவாமி சன்னதியில் காமாட்சி விளக்கு மற்றும் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி வழிபடலாம். அதுமட்டுமல்லாமல் குத்து விளக்கு ஏற்றியும்  வழிபடலாம் .குத்துவிளக்கானது வெள்ளி அல்லது வெண்கலம்,  பித்தளையில் இருப்பதே சிறப்பாகும் .

விளக்கேற்றும் போது செய்ய கூடாதவைகள் ;

எவர்சில்வர் மற்றும் இரும்பு குத்துவிளக்குகளை ஏற்றுவது சிறந்ததில்லை  என்றும் சாஸ்திரம் கூறுகின்றது. மேலும் வேப்ப எண்ணெய் ,தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை விளக்கேற்ற பயன்படுத்தக் கூடாது என்றும் கூறுகின்றனர் . மேலும் மெழுகுவர்த்தி ,கலர் விளக்குகள், தண்ணீர் விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்துவதனால் எந்தப் பயனும் இல்லை .பஞ்சபூதங்களில் ஒன்றான மண் கொண்டு தயாரிக்கப்பட்ட அகல் விளக்கு ஏற்றுவதே விசேஷமானதாக கூறுகின்றனர்.

மேலும் அருகில் இருக்கும் கோவிலில் இரண்டு அகல் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் .அந்த தீப விளக்குகள் பிரகாசிப்பதை போல் நம்முடைய வாழ்வும் பிரகாசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
sanjay rai kolkata
BiggBossTamilSeason8
DMK Candidate VC Chadrasekar - NTK Candidate Seethalakshmi
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai