பொதுவாக கோவில் என்றாலே காலையில் நடை திறக்கப்பட்டு இரவு நடை சாத்தப்படும். ஆனால் இக்கோவில் சற்று வித்தியாசமாக இரவில்தான் நடை திறக்கப்படுகிறது அதுவும் திங்கள் கிழமை மட்டும். இதைப் பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக காணலாம்.
இத்திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள. பறக்காலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் வெள்ளாள மரத்தில் அருள் பாலித்து வருகிறார்.
இரண்டு முனிவர்களுக்கு இடையே இல்லறம் சிறந்ததா துறவறம் சிறந்ததா என வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிவபெருமான் இரண்டுமே சிறந்தது தான் என தீர்ப்பு வழங்கினார் இருவருக்கும் பொதுவான கருத்தை கூறியதால் இவர் பொது ஆவுடையார் என அழைக்கப்படுகிறார்.
முனிவர்கள் ஈசனிடம் இங்குள்ள பக்தர்களுக்கு தாங்கள் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் சிவபெருமானும் அங்குள்ள வெள்ளாள மரத்திலே ஐக்கியமானார்.
இங்குள்ள வெள்ளாள மரத்தின் இலை பிரசாதமாக பத்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த இலைகளை பறித்துச் சென்று பூஜை அறை மற்றும் பண பெட்டிகளில் வைத்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது ஐதீகம். அங்குள்ள ஆலமரத்திற்கு தொட்டில் கட்டி வழிபட்டால் திருமண தடை மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
முனிவர்களுக்கு சிவபெருமான் கார்த்திகை மாதம் திங்கள் கிழமை அன்று காட்சியளித்ததால் ஒவ்வொரு திங்கள் கிழமை அன்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதுவும் சிதம்பரத்தில் அர்த்த சாம பூஜை நடந்து முடிந்ததும் இரவு 10 மணிக்கு மேல் இங்கு நடை திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு பூஜை நடைபெறுகிறது.
இக்கோவில் திறக்கப்பட்ட பின் மரத்தின் பகுதியை வெண்ணிற துணியால் மறைத்து முன்பக்கம் சிவலிங்கமாக அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகிறது. ஆலமரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் தரிசனம் செய்த முடித்த பின்பு சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்தப்படுகிறது. தைப்பொங்கல் அன்று மட்டும் அதிகாலை முதல் மாலை 7 மணி வரை நடை திறக்கப்பட்டு இருக்கும். அன்று இறைவனின் மேனியில் சூரிய ஒளி படுவது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.
இது தவிர சிவராத்திரி, திருக்கார்த்திகை, அண்ணா அபிஷேகம் போன்ற எந்த பண்டிகையும் கொண்டாடப்படுவதில்லை. இங்கு நடை அடைத்திருக்கும் போது அங்குள்ள கதவுக்கு பூஜை நடத்தப்படுகிறது பக்தர்கள் கதவையே சிவனாக பாவித்து மாலை சாத்தி தரிசித்து செல்கிறார்கள். எனவே ஒருமுறை திங்கள் அன்று பொது ஆவுடையார் கோவிலுக்கு வந்து தரிசித்து ஈசனின் அருளை பெற்று செல்லுங்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…