தீராத எப்பேர்பட்ட வழக்குகளையும் தீர்த்து வைக்கும் வழக்கறுத்தீஸ்வரர்  ஆலயம்..!

valakaruthiswarar temple

வழக்கறுத்தீஸ்வரர் கோவில் -பொதுவாக ஒருவர் கோர்ட், கேஸ் என்று சிக்கிவிட்டால் அவ்வளவு எளிதாக வெளியே வந்து விட முடியாது. நீதி அவர் பக்கம் இருந்தாலும் கூட மிகக் கடினம் தான் .ஆனால் எப்பேர்பட்ட வழக்காக இருந்தாலும் வழக்கறுத்தீஸ்வரரை வழிபட்டால் தீர்ந்துவிடும். அப்படிப்பட்ட இந்த திருத்தலம் அமைந்துள்ள இடம் மற்றும் சிறப்புகளை பார்ப்போம்.

திருத்தலம் அமைந்துள்ள இடம்:

காஞ்சிபுரத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் காந்தி ரோட்டில் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி அருகில் வழக்கறுத்தீஸ்வரர்  ஆலயம் அமைந்துள்ளது.

காலை 7- 12 மாலை 5 -8 மணி வரை  நடை திறந்திருக்கும். திங்கள் கிழமை காலை 5.30-1 மாலை 4.30-9 மணி வரை நடை திறந்திருக்கும்.

ஆலயத்தின் சிறப்புகள்: 

முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் இருந்த பிரச்சனையை சிவன் தீர்த்து வைத்ததால் வழக்கறுத்தீஸ்வரர் என கூறப்படுகிறார் .பொதுவாக அர்ச்சகர்கள் கையில் பூ மற்றும் பூஜை பொருட்கள் தான் இருக்கும் ஆனால் இங்கு உள்ள அர்ச்சகர் கையில் அதிகமாக கேஸ் பேப்பர்கள் தான் உள்ளது.

திங்கள்கிழமை 16 வாரங்கள் 16 விளக்குகள் ஏற்றி வழக்கறுத்தீஸ்வரரை வளம் வந்து வழிபட்டால் தீராத வழக்குகளும் விரைவில் தீர்ந்து விடும் மேலும் பதினாறாவது வாரம் முடிந்தவர்கள் அன்னதானம் செய்யலாம், அல்லது ருத்ர யாகம் செய்தும் வழிபடலாம்.

இங்கு பல அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் வந்து வழிபாடு செய்து வெற்றியும் கிடைத்தது என கூறப்படுகிறது.  ஒருவர் கால் வைக்க கூடாத இடத்தில் கால் வைத்தால் அதிலிருந்து மீண்டு வருவது கடினம். அதனால் தான் நம் முன்னோர்கள் போலீஸ் நிலையங்கள் ,நீதிமன்றங்களின் வாசலில் கால் வைக்க  கூடாது என கூறுவார்கள்.

சொத்துப் குவிப்பு வழக்கு ,விவாகரத்து வழக்கு, குற்றவியல் வழக்குகள், ஜீவானம்சம்  வழக்குகள் மற்றும் இது போன்ற பல்வேறு வழக்குகளில் காலதாமதத்தினால் ஒத்திவைக்கப்பட்டு நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் பலரும் உண்டு இதிலிருந்து விடுபட கடைசியாக தஞ்சம் அடைவது கடவுளிடம் தான்.

இவ்வாறு நிம்மதி இன்றி இருப்பவர்கள் வழக்குகள் வெற்றி பெற வழக்கறுத்தீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வாருங்கள் .  நியாயம் உங்கள் பக்கம் இருந்தால் விரைவில் வெற்றி நிச்சயம்..!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்