நம் பலரும் அறிந்திறாத இந்த அபூர்வமான சோடசக்கலை நேரம் எப்போது வரும் என்பது பற்றியும் நம் எவ்வாறு அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.
சோடச கலை நேரம்:
சோடச கலை நேரம் என்பது திதிகளில் 16வது திதி என அகத்தியர் கூறுகிறார். நமக்கு தெரிந்தது 15 திதிகள் தான், பிரதமை தொடங்கி அமாவாசை வரை உள்ள தேய்பிறை திதிதியும் பௌர்ணமியில் இருந்து வரும் வளர்பிறை திதிகளும் தான். அமாவாசை மற்றும் பௌர்ணமி முடியும் ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் இந்த சோடசக்கலை நேரம் வரும். இந்த நேரத்தை நாம் சரியாக கணக்கிட்டு கூற முடியாது. இந்த இரண்டு மணி நேரங்களில் ஏதேனும் ஐந்து வினாடிகள் மட்டுமே சோடச கலை நேரம் வரும்.
சோடச கலையை நாம் பயன்படுத்தும் முறை:
அம்மாவாசை அல்லது பௌர்ணமி திதி அன்று முடியும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே நாம் தியானத்தை தொடங்கி விட வேண்டும் அதாவது பௌர்ணமி 4 மணிக்கு முடிகிறது என்றால் நாம் 3 மணிக்கே தியானம் மேற்கொள்ள வேண்டும். மூன்றிலிருந்து ஐந்து மணி வரை நமக்கு என்ன வேண்டுமோ அதில் ஏதேனும் ஒன்றை மட்டும் அந்த இரண்டு மணி நேரமும் நேர்மறையாக நினைத்து நம் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்த முறையை மேற்கொள்ளும் போது நாம் வெறும் தரையில் அமராமல் ஏதேனும் ஒரு துணியை விரித்து அதன் மீது அமர்ந்து, வடகிழக்கு நோக்கி அமர வேண்டும். விளக்கேற்றியும் வழிபடலாம். இந்த நேரத்தில் குடும்பமாக நாம் ஒரே விஷயத்திற்காக பிரார்த்தனை செய்யும் போது அது நிச்சயம் நடக்கும் ,ஏனெனில் கூட்டுப் பிரார்த்தனைக்கு மிகுந்த சக்தி உண்டு.
மேலும் இந்த நேரத்தில் மும்மூர்த்திகளும் திருமூர்த்திகளாக இணைந்து இந்த பிரபஞ்சமே அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நேரம் ஆகும். இந்த நேரத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் நினைத்ததை நிச்சயம் பெறலாம்.
ஆகவே வருகின்ற பௌர்ணமி தினத்தை தவறவிடாமல் அதில் வரும் சோடச கலையை முறையாக பயன்படுத்தி நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்ளுங்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…