சூரசம்ஹாரம் உருவான வரலாறும் . .முருக பெருமானின் அற்புதங்களும்..
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் .
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் .
தூத்துக்குடி -முருகப்பெருமானுக்கு முக்கியமான விரதங்களில் ஒன்று இந்த கந்த சஷ்டி விரதம். மாதம் தோறும் இரண்டு சஷ்டிகள் வந்தாலும் இந்த ஐப்பசி மாதம் வரும் மகா கந்த சஷ்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வருடம் நவம்பர் 2 ம் தேதி சனிக்கிழமை கந்த சஷ்டி விழா தொடங்கியது .அதன் ஆறாவது நாளான நவம்பர் 7 வியாழக்கிழமை சூரசம்காரம் நடைபெற இருக்கிறது.
சூரசம்ஹாரம் உருவான வரலாறு;
சூர பத்மன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். தேவர்கள் தங்களை காக்க பிரம்ம தேவனிடம் வேண்டினார்கள். ஆனால் பிரம்ம தேவன், உங்களைக் காப்பாற்ற சிவபெருமானாள் மட்டுமே முடியும் என்று கூறிவிட்டார். பின்பு தேவர்களும் சிவபெருமானை வேண்டினார்கள். ஆகவே சிவபெருமான் தன் நெற்றி கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை உருவாக்கினார் ..அதிலிருந்து வந்தவர் தான் முருகப்பெருமான். பின்பு முருகப்பெருமான் கார்த்திகைப் பெண்களிடம் வளர்க்கப்பட்டார், பிறகு அன்னை பார்வதி தேவியால் ஒன்றாக்கி ஆறுமுகம் என பெயரிடப்பட்டார் .
சூரபத்மாவை அளிக்க அன்னை பார்வதி தேவி தனது சக்தியை வேலில் உருவேற்றி முருகப்பெருமானுக்கு வழங்கினார். முருகப்பெருமான் தன் படையுடனும் வேலுடனும் போர்க்களத்திற்கு சென்று முதலில் சிங்க முகனையும் தாராக சூரணையும் அழித்தார். ஆனால் சூரபத்மனோ தன் தோல்வியை ஒற்றுக்கொள்ளாமல் மரமாக மாறினார் ,முருகன் தனது வேலால் அந்த மரத்தை இரண்டாகப் பிளந்தார். பிளக்கப்பட்ட ஒரு பகுதி மையிலும் மற்றொரு பகுதி சேவலமாக மாறியது.. கருணை உள்ளம் கொண்ட கந்த பெருமான் தனது வாகனங்களாக அவற்றை ஏற்றுக் கொண்டார்.
இதனால் தேவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் ,இதற்கு நன்றி செலுத்தவே இந்திரன் தனது மகள் தெய்வானையை மணம் முடித்துக் கொடுக்க எண்ணினார். அதன்பின்பு திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடைபெற்றது. இப்படி முருகப்பெருமானின் சிறப்புகளை கூறிக்கொண்டே போகலாம். அவற்றில் மிக சிறப்பு வாய்ந்தது இந்த சூரசம்கார நிகழ்வு.
ஆகவே இந்தப் போர் நடந்த நாட்களையே கந்த சஷ்டியாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. இந்த நாளன்று அசுரனை பொம்மையாக உருவாக்கி அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்காரம் நடைபெறும். அதிலும் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருசெந்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாக உள்ளது .
ஆனால் இந்த மகா கந்த சஷ்டி சூரசம்காரம் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக நடைபெற்றாலும், ஐந்தாம் படை வீடான திருத்தணியில் மட்டும் நடைபெறுவதில்லை.
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்;
முருகப்பெருமான் சிங்காரவேலனாக சிக்கலில் அன்னையிடம் வேல் வாங்கி வந்து தான் இந்த சூரசம்காரம் நடைபெறும் ஐந்தாம் நாள் அன்று இது நடைபெறுகிறது. இக்காட்சி நடைபெறும் போது சிங்காரவேலனுக்கு வியர்வை வரும் என்று இன்றும் கூறப்படுகிறது.
பிறகு ஆறாம் நாள் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகங்கள் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு சுவாமி சூரசம்காரத்திற்கு கடற்கரையில் இருந்து எழுந்தருளுகிறார் . 5.30 மணி அளவில் ஜெயந்திநாதர் சூரசம்காரம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.
அதன் பிறகு சந்தோசம் மண்டபத்தில் ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெறும்.அதன் பிறகு 108 மகாதேவர் சன்னதியில் சாயா அபிஷேகம் நடைபெற உள்ளது. சாயா என்றால் உருவம் என்று பொருள். ஜெயந்தி நாதரை கண்ணாடி முன்பு வைக்கப்பட்டு அந்த கண்ணாடியின் உருவத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.நவம்பர் 8 ஆம் தேதி அன்று காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகங்கள் நடைபெறும் .இரவு 11 மணிக்கு பிறகு திருக்கல்யாணம் நடைபெறும்.
சிலர் சூரசம்காரம் முடிந்த பிறகு திருப்பரங்குன்றம் சென்று திருக்கல்யாணம் பார்த்துவிட்டு விரதத்தை முடிப்பார்கள்.இந்த ஆறு நாட்களும் உலகெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் திருச்சந்தூரில் குவிந்திருப்பார்கள். அவர்கள் தங்குவதற்கு உண்டான அனைத்து வசதிகளும் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டிருக்கிறது.
“சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை” என்ற பழமொழிக் இணங்க இந்த கந்த சஷ்டி விரதத்தில் விரதம் இருந்து முருகப்பெருமானின் அருளை பெற்று வாழ்வில் அனைத்து சகல செல்வங்களும் பெறுவோம்.