வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை..!
வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி என்னும் இடத்தில் தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் சந்நிதி உள்ளது.இங்கு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வர்.
கடந்த சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்தது.இதுவரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் ஜுன் மாதம் முதல் தென் மேற்கு பருவ மழை தொடங்க உள்ளதால் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வரும் 1 தேதி முதல் தடைவிக்கப்பட்டுள்ளது.இதனை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் வெள்ளியங்கிரி மலையில் சூழல் எப்பொழுது வேண்டுமானாலும் மாறும் மேலும் மழை காலங்களில் கடும்குளிர் நிலவும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது.அதனால் இங்கு மழை பெய்யும் எனவே பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
மேலும் மலைக்கு செல்லும் கேட்டுகள் எல்லாம் முடப்படும்.இதனை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்று செயல்படும் இதனை மீறி மலைக்கு செல்லும் பக்தர்கள் மீது வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.இதனால் வரும் 1 தேதி முதல் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.