கார்த்திகைத் தீபம் ஏன் கொண்டாடுகின்றோம் தெரியுமா? இதோ முழு விவரம்!
கார்த்திகை தீபத் திருவிழா என்பது தமிழ்நாட்டின் ஒளி விழாவாகும். எண்ணெய் கொண்டு ஏற்றப்படும் விளக்குகள் இந்திய கலாச்சாரத்தில் புனிதத்தின் சின்னமாகும். . இத்தீப ஒளியின் சிறப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ் மாதத்தின் எட்டாவது மாதம் ஆன கார்த்திகை மாதம் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது .அதாவது அக்னி ரூபமாக போற்றப்படும் சிவபெருமானுக்கும் அக்னியில் உதித்த முருகனுக்கும் , காக்கும் கடவுளான விஷ்ணுவிற்கு உகந்த மாதமாக திகழ்கிறது. இந்த தீப ஒளி திருநாளுக்கு இரண்டு வரலாறுகள் கூறப்படுகிறது.
கார்த்திகை தீபம் தோன்றிய வரலாறு
பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் யார் உயர்ந்தவர் என்ற விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு அக்னி பிளம்பாக சிவன், லிங்கோத்பவராக தோன்றி இருவருக்கும் ஒரு போட்டி வைத்தார். தன் அடியையும் முடியையும் எவர் காண்கிறாரோ அவர்தான் உயர்ந்தவர் என்றார்.
உடைந்த மற்றும் பழைய விளக்குகளை என்ன செய்யணும்னு தெரியலையா? அப்போ இந்த பதிவை படிங்க..
உடனே விஷ்ணு வராகர் வடிவம் எடுத்து அடியைக் காண சென்றார். பிரம்மனோ அன்னப்பறவை வடிவில் முடியை காண செல்கிறார். பல ஆண்டு பயணம் கொண்டும் தன்னால் அடியை காண இயலவில்லை என விஷ்ணு ஒப்புக்கொண்டார். பிரம்மன் மேலே செல்லும்போது வானில் இருந்து கீழே வந்த தாழம் பூவிடம் நீ யார் எனக் கேட்டார், அதற்கு தாழம்பூ நான் சிவனின் தலையில் இருந்து பல ஆண்டுகளாக விழுந்து கொண்டிருக்கிறேன் எனக் கூறியது.
ஆத்திரம் அடைந்த ஈசன்
பிரம்மா தாழம் பூவிடம், தான் நெருப்பு பிளம்பாக நின்று கொண்டிருந்த சிவனை கண்டுவிட்டேன் என பொய் கூறும் படி கேட்டுக்கொண்டார். அதற்கு சிவனிடம் தாழம் பூவும் முடியை கண்டுவிட்டதாகவும் அதற்கு நானே சாட்சி எனவும் கூறியது.
கோபம் கொண்ட ஈசன் பிரம்மாவிற்கும் ,தாழம் பூவிற்கும் சாபமிட்டார் . இவ்வுலகில் பிரம்மனுக்கு கோவில்கள் எங்கும் அமையாது என்றும் தாழம்பூ இனிமேல் சிவபூஜையில் நீ பயன்பட மாட்டாய் என்றும் சாபம் அளித்தார்.
பின்பு தன் தவறை உணர்ந்த தாழம்பூவும் பிரம்மாவும் உத்திரகோசமங்கையில் சிவனை நோக்கி பல ஆண்டுகளாக தவம் புரிந்தனர் .பிறகு சிவபெருமானும் மன்னிப்பு அளித்தார் . அதனால் அங்கு மட்டும் தாழம்பூ பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. பிரம்மாவிற்கு பிறகு தான் ஒரு சில இடங்களில் கோவில்கள் உருவாக்கப்பட்டது .
தன் தவறை உணர்ந்த பிரம்மாவும் விஷ்ணுவும்
மகாவிஷ்ணுவும் பிரம்மனும் தங்கள் தவறை உணர்ந்து சிவபெருமானே உயர்ந்தவர் எனவும் , நாங்கள் கண்ட அக்னி ஜோதி பிளம்பான லிங்கோத்பவரை அனைவரும் காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சிவபெருமானும் கோரிக்கையை ஏற்று திருவண்ணாமலையில் ஜோதிப் பிளம்பாக எழுந்தருளினார் என்று ஒரு வரலாறு கூறுகிறது.
மற்றொரு வரலாறாக
சிவபெருமானின் ஐந்து முகங்களான ஈசானம், தற் புருஷம், அகோரம், வாமதேவம் சத்யோஜிதம் என்கிற முகங்களோடு அதோ முகம் என்கிற ஆறாவது முகம் வெளிப்பட அந்த ஆறுமுகத்திலிருந்தும் ஏற்பட்ட தீ பொறிகளில் இருந்து தான் முருகப்பெருமான் அவதரித்தார். அந்த தீப்பொறிகளை வாயு பகவான் சரவண பொய்கையில் கொண்டு சேர்த்தார். அது ஆறு தாமரைகளில் குழந்தைகளாக மலர்ந்தது. இக்குழந்தை ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தனர், பார்வதி தேவி தாய் பாசத்துடன் அணைத்ததால் முருகப்பெருமான் ஆறு தலையும் 12 கைகளுடன் ஆறுமுக சுவாமியாக அவதரித்தார். முருகரை வளர்த்த அந்த கார்த்திகை பெண்கள் வானில் ஆறு நட்சத்திரமாக மின்னுவார்கள் என வரம் அளித்த தினமே இந்த கார்த்திகை தீபம் தோன்றியதாக சொல்லப்படுகிறது இவ்வாறு இரு புராணக் கதைகள் உள்ளது.
என்னதான் புராணக் கதைகள் இருந்தாலும் திருகார்த்திகை தீப ஒளிகளை ஏற்றி நம் வீடுகளை அலங்கரித்து நின்று பார்க்கும்போது நம் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும்.அந்த வகையில்இந்த ஆண்டு நவம்பர் 26 திருக்கார்த்திகை தினம் கொண்டாடப்படுகிறது. இது கிருத்திகை நட்சத்திரம் அன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி நவம்பர் 27 , 1:30 மதியம் முடிவடைகிறது. இந்நாளன்று அனைவரும் வீடுகளிலும் தீப ஒலிகளை ஏற்றி மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.