வரம் தரும் மார்கழி மாதத்தின் சிறப்புகள்..!

மார்கழி மாதத்தின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

aandal (1)

மார்கழி மாதத்தின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை ;மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்றும் கூறுவார்கள் .சூரிய பகவான் வியாழ பகவான் வீட்டில் சஞ்சரிக்கும் மாதம் ஆகும் .மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலமாக சொல்லப்படுகிறது.  கிருஷ்ண பரமார்த்தா  அர்ஜுனனை பார்த்து மாதங்களில் நான் மார்கழியாக  உள்ளேன் எனக் கூறியுள்ளார். இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறை வழிபாட்டை மேற்கொண்டால் ஒரு வருடம் இறைவழிபாடு செய்ததற்கு சமமாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த மாதத்தில் சிறு கோவிலுக்கு தனுர் பூஜைக்கு அபிஷேகப் பொருள் கொடுக்க வேண்டும் .தனுர்  பூஜை என்பது மார்கழி மாதத்தின் முதல் பூஜையாக சொல்லப்படுகிறது. இந்த பொழுதில் தான் தேவாதி தேவர்கள் வழிபாடு செய்வதாக ஐதீகம்.அதனால் வேண்டிய வரம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது . மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது ,அதேபோல் ஆருத்ரா தரிசனம் சிதம்பரத்தில் சிறப்பாக கொண்டாடப்படும்.

உச்சி முதல் பாதம் வரை உடலை உறைய  வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இறைவழிபாட்டிலும் ஆன்மீகத்திலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய மாதமாக மார்கழி மாதம் உள்ளது . ஆண்கள் மாலை அணிந்து அசைவம் தவிர்த்து விரதம் மேற்கொள்வார்கள். அதே போல் பெண்கள் அதிகாலையில் குளிரையும் பொருட்படுத்தாமல் வீட்டு வாசலில் கோலம் இடுவார்கள். இவ்வாறு  அரிசிமா கோலம் போட்டு  சிறு உயிர்களுக்கு உணவளிப்பதன் மூலம் கன்னிப் பெண்களுக்கு ஏற்படும் திருமண தடை ,தோஷம் விலகும் என்று நம்பப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் அதிகாலையில் மார்கழி மாதத்தில் ஆக்ஸிஜன் அதிகமாக இருப்பதால் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து விட வேண்டும். இந்த  குளுமையான சூழ்நிலையில் எழுந்து பக்தி செய்யும்போது பல கோடி மடங்கு நன்மை கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை, திரு பள்ளி எழுச்சி படிப்பது மிக சிறப்பாக சொல்லப்படுகிறது. நல்ல திருமண வரன் கிடைக்க இந்த மாதம் பாவை  நோன்பு 30 நாட்களும் இருந்தால் நல்ல துணை அமையும் என்பது ஐதீகமாக உள்ளது.

மேலும் இந்த மார்கழியில் அரச மர விநாயகருக்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்யும் போது விரைவில் குழந்தை பேரு கிட்டும் என்றும் சொல்லப்படுகிறது. மார்கழி மாதத்தில் உயிர்ப்பிக்கும் தன்மை குறைவாக இருப்பதால் விதைகள் விதைக்க கூடாது. திருமணங்கள் செய்யக்கூடாது என்றும் சாஸ்திரங்கள்  கூறுகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk