தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை

Default Image

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு எனும் ஊரில் பிரசித்தி பெற்ற  சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த தலத்தில் மிக நுண்ணிய வேலை பாடுகளை கொண்ட சிற்பங்கள் அமைந்துள்ளது இந்த தலத்தின் சிறப்பாகும்.

நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

பூஜையொட்டி சாமிக்கு சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், திருமஞ்சனப்பொடி, பால் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதன் பின்னர் ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளினார்.

சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதற்கு பிறகு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு செவ்வரளி பூக்களால் மலர் அபிஷேகம் நடத்தப்பட்டது.

இதையடுத்து சொர்ண ஆகர்ஷண பைரவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.அதன் பிறகு பக்தர்களால் ராமநாம கீர்த்தனைகள் பாடப்பட்டன. இந்த சிறப்பு பூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரின் அருளை பெற்றார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்