திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் அக்னித் தலமாகும்.திருவாசக திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கடந்த 21 ந் தேதி அருணாசலேசுவரர், அம்பிகை உண்ணாமுலையாளுக்கும் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மை அப்பரின் அருளை பெற்றார்கள்.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நலங்கு,ஊஞ்சல் உற்சவம் என பல சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. நேற்று முன்தினம் அருணாசலேசுவரர், அம்பிகை உண்ணாமுலையம்மனும் தாமரை குளத்தில் பாலிகை விடும் நிகழ்வு நடை பெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இருவரின் அருளையும் பெற்றார்கள்.அதற்கு பிறகு இரவு மண்டகபடி உற்சவமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…