விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு அம்சங்கள்!
விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு அம்சங்கள்.
விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகருக்காக கொண்டாடப்படும் சிறப்பு விழாவாகும். இவ்விழாவானது ஆவூரு ஆண்டும் ஆவணி மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த விழா விநாயகரின் பிறந்தநாளான கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவானது, தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு, தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்கின்றனர். இந்த சிலையானது, முக்கால் அடியில் இருந்து 70அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன.
பின் இந்த சிலையானது, 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. மேலும், இந்த நாளில், வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் பூஜை செய்வார்.
இந்த நாளில், கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்கின்றனர்.