மண்ணுக்கடியில் அஸ்தமிக்கும் போது சூரியன் வழிபடும் மகேஸ்வரன்..!மானுட வாழ்வில் தரிசிக்க வேண்டிய சிவத் தலம் இது..!

Published by
kavitha

உத்திராயான புண்ணிய காலத்தின் தொடக்க நாளான மகர சங்கராந்தியன்று மட்டும் ,மேற்கில் அஸ்தமிக்கும் சூரியன்,தெற்கு பார்த்த குரு மூர்த்தி வடிவமாய் எழுந்தருளி உள்ள சிவபெருமானை சுமார் 20  நிமிடம் மட்டும் வழிபடும் ஒரு அதியசய நிகழ்வானது நடைபெறுகிறது.

தெற்கை பார்த்து இருக்கும் சிவபெருமானை மேற்கில் மறையும் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி சாத்தியம் என்று நம்மை கேள்வி எழுகிறது அல்லவா ஆனால் இதுவே உண்மை.

 

இந்த கோவிலானது கவி கங்காதரேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.கவி என்றால் குகை என்று பொருள் குகைக்குள் சுவாமி எழுந்தருளி இருப்பதால் சுவாமிக்கு இப்பெயர்.மேலும் இக்கோவிலானது ஒரு குகை கோவிலாகும்.

ஆனால் ஆலயம்  பார்ப்பதற்கு சிறிதாக தோன்றுகிறது.ஆலய வாயிலில் கோபுரம் எதுவும் இல்லை.ஆனால் 18  அடி உயரத்தில் ஒரு கல்லினால் ஆன அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட 4 தூண்கள் நிறுவப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கொடிமரம்,பலிபீடம்,நந்தி மண்டபம் ஆகியவற்றை கடந்து மண்ணுக்கடியில் நிலமட்டதுக்கு கிழே 3 பிராகாரங்கள் உடன்   அமைந்துள்ளது.குகைக் கோவில் உள்ளே நுழையும் போது அதன் கூறையைப் பார்த்தாலே தெரியும்.குகையின் ஏற்றம் மற்றும் இறக்கத்திற்கு தக்கவாறு குனிந்து செல்ல வேண்டும்.

சுவாமி அர்த்த மண்டபத்தில் உள்ள பிரகாரத்தில் சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் அம்பிகை,பார்வதி தேவி,துர்க்கை ,கௌதமர்,பரத்வாஜ்,சண்டிகேஸ்வரர்,உமா மகேஸ்வரர் , அர்த்த மண்டபத்திற்கு

வெளியே தட்சிணாமூர்த்தி,கால பைரவர்,வீரபத்திரர் ,  சூரியன்,சந்திரன் ஆகியோர் கட்சி அளிக்கின்றனர்.3  பிரகாரத்தில் அக்னி மூர்த்தி 2 முகங்கள்,4 கொம்புகள்,7 கரங்கள்,3 பாதங்களுடன் காட்சி தருகிறார்.சப்த மாதர்கள்,ஸ்ரீ தேவி,பூமி தேவி  ஆகியோரை இந்த  பிரகாரத்தில்  தரிசிக்கலாம்.

மேலும் குகைக்குள் அமைந்திருக்கும் சிவருபனை வழிபடுவது வாழ்வில் சிறப்பை தரும்.மேலும் இதனை குறிப்பிட்டால் திரேதாயுகத்தில் மகரிஷிகள் 3 தலங்களில் இறைவனை பூஜிப்பதாக வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

உஷத் காலத்தில் காசி,உச்சிக் காலத்தில் கவிபுரம்,மாலையில் சிவகங்கா, ஆகிய        தலங்களில் பூசை செய்திருப்பதாக ஐதிகம்.மேலும் இக்கோவிலில் 2 சுரங்கப் பாதைகள் செல்கிறது.அதில் ஒன்று காசிக்கும் மற்றும் சிவகங்காவுக்கும் செல்கிறது.ஆனால் தற்போது அவை மூடப்பட்டுள்ளது.இந்த திருத்தலத்தில் கௌதம மகரிஷி தவம் செய்தார் என்றும் மேலும் அவருடைய தவத்திற்கு அருள் புரிய இறைவன் சுயம்புவாக லிங்கமாக தோன்றியுள்ளார்.இதில் மற்றொரு சிறப்பு நந்தியம் பெருமான் சுயம்புவாக தோன்றியுள்ளார்.பதஞ்சலி முனிவர் இங்கு வந்து வழிபட்டுள்ளார்.மேலும் இங்கு அஸ்தமிக்கும் சூரியன் சுவாமியை வழிபடுவது,இறைவனின் அருளால் சிற்பக் கலைஞர்கள் நிகழ்த்திய அதியசம் என்று தான் சொல்ல வேண்டும்.

கோவில் வழிபாட்டுச் சிறப்புகள் :

திருமணம் தடைப்படும் அன்பர்கள் செவ்வாய் கிழமைகளில் தலைக்கு ஸ்நானம் செய்துவிட்டு,ஈர வஸ்திரத்துடன் சப்தமாதர்களை பிரதட்சணம் செய்து வழிபட்டால் விரைவில் திருமணத் தடை விலகி நல்ல இடத்தில் வரன் அமைகின்றது.

கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள் வியாழக்கிழமை மாலை கோவிலுக்கு வந்து தெற்கு பார்த்து குரு மூர்த்தியாக அருள்புரியும் கங்காதரேஸ்வரையும்,தட்சணா மூர்த்தியையும் வழிபட்டால் கல்வியில் நல்ல முறையில் அமையும்.

கண் சம்பத்தப்பட்ட நோய்களைப் போக்கும் வரப்பிரசாத மூர்த்தியாக அக்னி மூர்த்தி உள்ளார்.இவரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட வேண்டுமானால்,கோவிலில் உள்ள கணபதிக்கு சிவப்புத் தாமரை மலர்களை அர்ப்பணித்தால் தொல்லை நீக்குகிறது.மேலும் கோவிலில் பிரதோஷம்,சோமவாரங்கள்,மாதசிவராத்திரி ,போன்ற வழிபாடுகளும்,மகா  சிவராத்திரியும் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

இத்தைய பெருமை வாய்ந்த கோவிலானது பெங்களுரு சிட்டி மார்க்கெட்டிலிருந்து சுமார் 3 கீ.மீ  தொலைவில் குட்டஹள்ளி கவிபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது.காலை 7 மணி முதல் 12.30 வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை கோவில் நடை ஆனது திறந்திருக்கும் சென்று தரிசித்து வாருங்கள்.

 

Recent Posts

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

5 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

53 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

2 hours ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago