திருத்தங்கல் மாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்..!! தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…!!
சிவகாசி-திருத்தங்கல் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 14 நாட்களாக நடந்து வருகிறது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனையும் நடந்தது சிறப்பு அலங்கரத்தில் அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளினார்
பக்தர்கள் பொங்கல் வைத்தும் ,அக்னி சட்டி எடுத்தும்,கயிறு குத்தியும்,ஆயிரம் கண் பானை,மற்றும் முளைப்பாரி எடுத்தும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர் நேற்று காலை 10.30 மணிக்கு அம்மன் அலங்கரிக்கபட்ட தேரில் எழுந்தருளினார்.ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேர் ரத வீதிகளில் வந்து திரும்பவும் தன் நிலை இருக்கும் இடத்திற்கு வந்தது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்