குளிகை நேரத்தில் இதெல்லாம் செய்யக்கூடாதா? இது தெரியாம போச்சே!
பொதுவாக நாம் ஒரு காரியம் செய்கிறோம் என்றால் ராகு காலம், எமகண்டம் இருக்கக் கூடாது அதுபோல்தான் குளிகை நேரத்திலும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று நம் பெரியோர்கள் கூறியுள்ளனர் அதைப்பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ராகு காலம் எமகண்டம் என்பது துர்க்கை வழிபாட்டிற்கு சிறந்த நேரமாகும். அதுபோல் குளிகை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட என்பது பொருளாகும். அதாவது குளிகை நேரத்தில் நாம் எதை செய்தாலும் திரும்பத் திரும்ப செய்ய வைக்கும் என்பது அந்த நேரத்திற்கான தன்மையாகும். அதனால் இந்த குளிகை நேரத்தில் ஒரு சில காரியங்களை பார்த்து செய்ய வேண்டும் என பெரியோர்கள் கூறுகின்றனர்.
குளிகை நேரத்தில் செய்ய வேண்டியவை
சுப காரியங்களில் திருமணத்தை தவிர மற்றவை செய்யலாம் . ஏனெனில் திருமணம் என்பது ஒரு முறை செய்வதுதான் நம் கலாச்சாரம்.
கடன் அடைப்பது ,பிறந்தநாள் கொண்டாட்டம், திருமண நாள் கொண்டாட்டம் மற்றும் நம் வாழ்வில் எதெல்லாம் திரும்ப வேண்டும் என்று நினைக்கிறோமோ அவற்றை செய்யலாம்.
செய்யக்கூடாதவைகள்
தகனம் செய்யக்கூடாது ஒருவர் மரணம் அடைந்து விட்டால் குளிகை நேரத்தில் அவரை எடுப்பது முதல் எரியூட்டும் வரை எந்த நிகழ்வையும் செய்யக்கூடாது அவ்வாறு செய்தோமே ஆனால் வீட்டில் மீண்டும் மீண்டும் அந்நிகழ்வு நடக்கும், என்பதால் தவிர்க்க வேண்டும்.
கடன் வாங்குதல், நகை அடமானம் வைத்தல் ,வீடு மாறுதல் போன்றவற்றையும் செய்யக்கூடாது.
ஆகவே குளிகை நேரம் என்றாலே கெட்ட நேரம் என்பதில்லை அந்த நேரத்தில் நாம் செய்வதை திரும்பச் செய்ய வைக்கும், அதனால் நாம் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என அறிந்து அந்நேரத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.