வீட்டின் நுழைவாசலில் இந்தப் பொருள்கள் எல்லாம் வைக்க கூடாதா..?. அட இது தெரியாம போச்சே…

Home

ஒரு வீட்டு நிலை வாசல் என்பது தெய்வம் இருக்கும் இடம் என குறிப்பிடப்படுகிறது. இன்றும் புது வீடு கட்டுபவர்கள் நிலைவாசல் வைப்பதற்கு என்று ஒரு தினத்தை ஒதுக்குவார்கள். ஒரு வீட்டுக்குள் நாம் சென்றால் அது மங்களகரமாகத்தான் இருக்க வேண்டும் அதில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை நம் வீட்டு முன் வைக்க கூடாது அது என்னென்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நாம் ஒரு திருமணத்திற்கு சென்றால் அங்கு வரவேற்பவர்கள் நான்கு பேர் நின்று பன்னீர் தெளித்து புன்னகையுடன் வரவேற்பார்கள். அது நம்மை மகிழ்ச்சியடைய செய்யும். இதுவே வீட்டிற்கு ஒருவர் வருகிறார் என்றால் வாசல் வரவேற்கும் விதமாக இருக்க வேண்டும். அதற்காக பன்னீர் தெளித்து கற்கண்டு கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை சில பொருள்களை வைக்காமல் இருந்தாலே போதுமானது.

காலணிகள்
வீட்டில் முதலில் நுழையும் போது வரவேற்பது நம் செருப்பாக தான் இருக்கும். அவ்வாறு போடக்கூடாது . செருப்புகளை மறைத்து தான் வைக்க வேண்டும். இப்போது அதற்கான ஸ்டாண்ட் பல மாடல்கள் வந்து விட்டது அதை உபயோகப்படுத்தி மறைத்து வைப்பதே சிறந்தது.

தகடு
ஒரு சிலர் வீட்டின் நன்மைக்காக மாந்திரீக முறையில் தகடு செய்து வைப்பார்கள் இது உங்கள் குலதெய்வத்திற்கு ஒத்துக்கொள்ளுமா என தெரிந்து செய்ய வேண்டும். ஏனென்றால் சில மாந்திரீக தகடுகள் எந்த சக்தியையும் வீட்டுக்குள் அனுமதிக்காது. இதனால் குலதெய்வம் வீட்டுக்குள் வருவதை தடுக்கும் இதனால் வீடுகளில் பல பிரச்சனைகள் மன சஞ்சலங்கள் ஏற்படும்.

பூக்கள் மற்றும் மாலைகள்

கோவிலில் கொடுத்த பூக்கள் மற்றும் மாலைகளை நிலை வாசலில் தான் மாட்டி வைப்போம். அவ்வாறு மாட்டி வைப்பதில் தவறு இல்லை. ஆனால் அதை காய்ந்த பிறகு எடுத்து விட வேண்டும். இல்லை என்றால் அது எதிர்மறை ஆற்றலை உள்வாங்கிக் கொள்ளும்.

அழகு செடிகள்

அழகிற்காக வீட்டின் முன் நம் பல செடிகளை வளர்க்கிறோம். ஆனால் முள் செடிகளை நிலை வாசலின் முன் வளர்க்கக்கூடாது. குறிப்பாக கற்றாழை போன்ற செடிகளை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

சாமி படங்கள்
வீட்டின் முன் மகாலட்சுமி, பெருமாள், குபேரன் போன்ற சாமி படங்களை வைக்கக் கூடாது. விநாயகர் படம் வைத்துக் கொள்ளலாம்.

எலுமிச்சை
சிலர்கோவிலில் கொடுத்த  எலுமிச்சைகளை   நிலை வாசலில் வைப்பார்கள். அது காய்ந்தாலும் அதை எடுப்பதில்லை. அவ்வாறு செய்வது தவறாகும். காய்ந்த பிறகு அதை எடுத்துவிட்டு புதிதாக பயன்படுத்தலாம். அது போல் மாவிலை தோரணங்கள் காய்ந்த பிறகு அதை மாற்ற வேண்டும். பன்னீர் கொண்டு நிலை வாசலை துடைத்து சந்தனம் ,குங்குமம் இட்டால் அது நல்ல உணர்வை உண்டாக்கி லட்சுமி கடாட்சமும் பெருகும்.

இவ்வாறு நம் வீட்டு வாசலில் தேவையில்லாத பொருட்களை வைப்பதை தவிர்த்து நல்ல அதிர்வலைகளை கொடுக்கக்கூடிய மகிழ்ச்சி தரக்கூடிய பொருட்களை வைக்கலாம். கஜலட்சுமி இரண்டு யானைகளுடன் இருப்பது போலும் கண் திருஷ்டி விநாயகர் போன்ற படங்களையும் நிலை வாசலில் வைக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்