சதுரகிரி மலைக்கு பக்தர்களை…!! அனுமதித்து கட்டுப்பாடுகளை …!!விதித்தது வனத்துறை…!!!
விருதுநகர் மாவட்டம் அருகே சதுரகிரி மலை மிக சிறப்பு பெற்றது இந்த நிலையில் ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதிகளில் மழை பெய்து வரும் சூழ்நிலையில் சதுரகிரி மலைக்கு செல்ல பக்த்ர்களுக்கு வனத்துறை அனுமதி மறுக்கபட்டது இதனை தொடர்ந்து பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் சுந்தர மகாலிங்க கோவிலில் 3 நாட்கள் தாங்கி வழிபட்டு வருவது வழக்கம்
சதுரகிரி சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது இதனால் சங்கிலி பாறை,மற்றும் மாங்கனி ஓடைகளில் மழை வெள்ளம் அதிகமாக இருந்த நிலையில் இதை அறியாமல் பிரதோஷத்தை முன்னிட்டு அங்கு சென்ற பக்தர்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது இந்த நிலையில் சூழ்நிலையை பொறுத்து அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர்
ஓடை பகுதிகளில் நீர்வரத்து குறைந்ததால் சில கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது நீர்வரத்து உள்ள ஓடைகளில் குளிக்க கூடாது என்றும் ஓடை அருகே தாங்க கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது
இன்று முதல் நான்கு நாட்களுக்கு காலை 5.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்