சங்கடத்திலும் -சந்தோஷத்திலும் நம்முடன் பயணிக்கும் சாய்..!பார்வை பட வைக்கும் மந்திர ஸ்லோகம்..!
ஒருவருடைய வாழ்வில் சங்கடமும் சந்தோஷமும் சரிபாதி என்பார்கள் உன்மை தான்.இரவு -பகல் ,நல்லது-கேட்டது ,நீர்-நெருப்பு,பிறப்பு-இறப்பு என்று இறைவனின் படைப்பில் இரு நிலையில் ஆண்-பெண் அதே போல தான் வாழ்வில் ஒருவன் இன்னலில் தவித்து கொண்டிருக்கும் சமயத்தில் யாரும் ஆறுதல் சொல்லகூட ஆள் இருக்காது.அதே ஒருவன் நன்றாக வாழும் போது யார் என்றே தெரியாத முகம் கூட வந்து பேசி விட்டு செல்லக்கூடிய நிகழ்வுகளை எல்லாம் கடந்து தான் வந்திருப்போம்.அப்படி ஒருவன் கஷ்டத்தில் இருக்கும் போது அவன் கையை விடாது தன்னை வணகினாலும் இல்லாவிட்டாலும் இறுக பிடித்து கொண்டு வழி நடத்தும் வள்ளலாக இருப்பவர் தான் சாய் என்னும் நாமத்திற்கு சொந்தமான வள்ளல் பிரான்
சாந்தமே வடிவாக சிரடி பிரபுவாக நம்மையெல்லாம் வழிநடத்தி செல்லும் குருவாக தாயாக ,தந்தையாக ஏன் எல்லாமுவாக இருப்பவர் தான் சாய்.சாய் என்கிற திருநாமமே அனைத்தையும் தீர்க்கும் மருந்தாகும்.
நம் வாழ்வில் திருப்பத்தையும் திடமான நம்பிக்கையும் ஏற்படுத்திய சாய் என்னும் நாமத்திருக்கு சொந்தக்கரர் தான் நமக்கு சொந்தம்.அத்தைய வாழ்வில் ஒரு திருப்பத்தை அந்த மௌனமே வடிவாக நேர்மறையான எண்ணகளை விதைத்து நான் இருக்கிறேன் என்று உள் அன்போடு வார்த்தையால் அணைக்கும் அந்த வள்ளளை 108 முறை ஷ்லோகத்தை சாய் நினைத்து வணங்கினால் அருகில் இருப்பவரை இன்னும் அருகில் நம்முடன் பயனிக்கும் அந்த பாதுகாவலனை நம்மை நெருங்கி வர உருகி அழைப்போம்.
“ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி “
என்ற திருமூல மந்திரத்தை உச்சரித்து வர சாயின் பரிபூரண அருளை பெறலாம்.ஜெய் ஸ்ரீ சாய் ராம்.