ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி ?
ரிஷப ராசிக்காரர்களே!
இந்த வாரம் தடைபட்ட பணம் கைக்கு வந்து செரும். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. விரும்பத்தகாத ஆசைகள் உண்டாகலாம். வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் தடைகள் கண்டாலும் வெற்றி பெறும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். திடீர் செலவுகள் உண்டாகும். அக்கம்பக்கத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம்.
எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டி இருக்கலாம். பெண்களுக்கு நண்பர்கள், அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் எடுக்கும் முயற்சிகளில் தடை உண்டாகலாம். அரசியல்வாதிகள் அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். விளையாட்டுகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தெற்கு
நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 6, 9
பரிகாரம்: லட்சுமி அஷ்டோத்ரம் படிப்பதும் லட்சுமி பூஜை செய்வதும் பணசிக்கலை நீக்கும், வாழ்வு வளம் பெறும்.
source: dinasuvadu.com