இன்று(மே.,29) இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?
இன்று(மே.,29) இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது..? என்பதை பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்கள்:
இன்று எண்ணிய எண்ணங்கள் எல்லாம் எளிதில் நிறைவேறும்.வீடு மற்றும் இடமாற்றம் சிந்தனை மேலோங்கும்.எதிர்பார்த்த விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.உடன் பிறந்தவர்கள் உங்கள் உள்ளம் அறிந்து நடந்து கொள்வீர்கள்.
ரிஷப ராசிக்காரர்கள்:
இன்று எடுத்த காரியத்தை எளிதில் முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள் முக்கிய புள்ளிகளை எதிர்கால நலன் கருதி சந்திப்பீர்கள் இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது.
மிதுன ராசிக்காரர்கள்:
இன்று கோபத்தை குறைத்து கொள்வதன் முலம் குதூகலம் சேரும்.சிலரின் சந்திப்பால் சந்தோஷம் அடைவீர்கள் திட்டமிட்ட காரியம் ஒன்று திடீர் மாற்றம் ஏற்படலாம்
கடக ராசிக்காரர்கள்:
இன்று உங்கள் நீண்ட நாளை நண்பரை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.பண தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும்.பஞ்சாயத்துகள் எல்லாம் நல்ல முடிவிற்கு வரும்.இல்ல தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் :
இன்று யோசித்து செயல்பட வேண்டிய ஒரு நாள்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.வேலை பளு அதிகரிக்கும்.தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது
கன்னி ராசிக்காரர்கள் :
இன்று நிகழ்கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும் அலுவலக பணிகள் எல்லாம் மளமளவென செய்து முடித்து மகிழ்ச்சி காண்பீர்கள்.
துலாம் ராசிக்காரர்கள் :
இன்று இனிய பேச்சால் எதிரிகளை வென்று மகிழ்ச்சி அடையும் நாள் இழு பரியாக இருந்து வந்த காரியங்கள் எல்லாம் இனிதே நடைபெறும்.தொழிலில் சிறப்பு கூடும்.பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் அகலும்.
விருச்சக ராசிக்காரர்கள்:
இன்று நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களுக்கு புக்ழ் கிடைக்கும்.செல்வ நிலை உயரும்.தொலை தூர பயணங்கள் எல்லாம் திட்டமிட்ட படியே நடைபெறும்.பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும்.
தனுசு ராசிக்காரர்கள்:
இன்று வாழ்க்கை துணை வழியே வரவு வந்து சேரும் விலகி சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர்.அடுத்தவர் நலனில் எடுத்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.திருமண பேச்சுக்கள் எல்லாம் முடிவாகும்.
மகர ராசிக்காரர்கள் :
இன்று உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள் பக்க பலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள் மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் மறையும் நாள்
கும்ப ராசிக்காரர்கள்:
இன்று நினைத்த காரியம் நிறைவெறும் நாள்.எதிர்மறை சிந்தனைகள் அகலும். நிம்மதியுடன் ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தெளிவு பிறக்கும் .நீண்ட நாள் ஆசை நிறைவேற வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கும்
மீன ராசிக்காரர்கள்:
இன்று தூர தேசத்தில் இருந்து நல்ல தகவல் ஒன்று பறந்து வரும்.விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு காரியங்களை செய்து முடிக்க சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டி மகிழ்வீர்கள்