மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி ?

Default Image

மீன ராசிக்காரர்களே!
இந்த வாரம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சூரியனின் சஞ்சாரம் அனுகூலமான பலன்களைத் தரும். பணவரவால் மனதிருப்தி உண்டு. புதிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சுக்கிரன் சஞ்சாரம்  ராசிக்கு 10-ல் இருப்பதால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
தொழில், வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதிநிலைமை சீர்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து காணப்படுவார்கள். பெண்களுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். கலைத்துறையினர் உணர்ச்சிகரமாகப் பேசி மற்றவர்களை ஈர்ப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை தீரும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்