மகர ராசிக்காரர்களே இந்த வாரம் எப்படி?
மகர ராசிக்காரர்களே!
இந்த வாரம் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். ராசியில் இருக்கும் கேதுவின் சஞ்சாரம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்புடன் இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். குடும்பத்திலிருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் வழக்கம்போல் நடக்கும்.
கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லது. அரசியல்வாதிகள் பல தடைகளைத் தாண்டிச் செயல்பட வேண்டி இருக்கும். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கவலை நீங்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: நீலம், மஞ்சள் | எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமை அன்று வெற்றிலை மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்…
source: dinasuvadu.com