ரிஷப ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்
ரிஷபம்; கடந்த இரண்டரை ஆண்டுகளாக சனி பகவான் உங்களது ராசியின் களத்தர ஸ்தானத்தில் இருந்து உங்களுக்கு பல இன்னல்களை கொடுத்திருப்பார். உங்களது உடல் நலம், குடும்பம், உறவுகள் மற்றும் அணைத்து விதத்திலும் நீங்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி இருந்திருப்பீர்கள். எனினும் சனி பகவான் தற்போது உங்களது ராசியின் 8ஆம் வீட்டிற்கு, அதாவது அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர உள்ளார். அஷ்டம சனியை கண்டால் முனிவர்களும் பயம் கொள்வார்கள். இதற்க்கு ஏற்றாற் போல் அடுத்த இரண்டரை ஆண்டுகள் உங்களுக்கு அஷ்டம சனி நிகழ உள்ளது. நவம்பர் 2018 முதல் ராகு மற்றும் குரு பெயர்ச்சி நிகழுவதால் வரவிருக்கும் 12 மாதங்கள் உங்களுக்கு பல நல்ல பலன்களை கொடுக்கும்…