மிதுன ராசிக்கு சனி பெயர்ச்சி பலன் .
மிதுனம்; ராசியின் சாதகமான ருன ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்து சாதகமற்ற களத்தர ச்தனத்திற்கு வரும் அக்டோபர் 25, 2௦17 அன்று பெயரவிருக்கிறார். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றதாக இல்லை. இதனால் நீங்கள் பல சங்கடங்களை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். முக்கியமாக உங்களது உடல் நிலை, குடும்பம் மற்றும் உறவினர்கள் போன்ற விசயங்களில் அடுத்த இரண்டரை ஆண்டுகள் போராட்டம் நிறைந்த சூழலே இருக்கும். இந்த சனி பெயர்ச்சி காலத்தில் குரு உங்களது ராசியின் 5, 6 மற்றும் 8-ம் வீட்டில் சஞ்சரிப்பார். ராகு மற்றும் கேது உங்களுக்கு வரும் மார்ச் 2௦19 வரை ஒரு கலவையான பலன்களையே தருவார். அதன் பின் உங்களது பிரச்சனைகள் அதிகரிக்கலாம். சனி பெயர்ச்சியின் முதல் ஒரு வருடம் உங்களுக்கு நல்லதாகவே உள்ளது. எனினும் அடுத்த வருண் ஒன்றரை ஆண்டு காலம் சற்று பிரச்சனைகள் நிறைந்ததாகவே இருக்கும். அதனால் வரும் அக்டோபர் 2018ற்குள் அணைத்து முக்கியமான விசயங்களையும் முடித்து விடுவது நல்லது. இதனால் நீங்கள் கண்டக சனி காலத்தை ஓரளவிற்கு நம்பிக்கையோடு கடக்கலாம்.