துலாம் ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்.
கடந்த ஏழரை வருடங்களாக இருந்த ஏழரை சனி காலத்தில் இருந்து நீங்கள் தற்போது விடுபட்டுள்ளீர்கள். வாழ்த்துகள்!
இந்த ஏழரை ஆண்டுகள் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல விடயங்களை கற்று கொண்டிருப்பீர்கள். இப்பொழுது உங்களுக்கு அதிர்ஷ்டம் மிக்க காலம் தொடங்கி விட்டது. சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிர்க்கு பெயருகிறார். நிகழும் இந்த சனி பெயர்ச்சி காலகட்டத்தில் சனி பகவான் உங்களது ராசியில் 5, 9 மற்றும் 12ஆம் வீட்டிற்கு பெயர உள்ளார். இது உங்களது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்றும். உங்களது உடல் ஆர்ரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மற்றும் நிதி நிலை உயரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காணப் படும். மேலும் நீங்கள் இத்தனை ஆண்டுகளாக இழந்த உறக்கத்தை இபொழுது பெறுவீர்கள்
இந்த சனி பெயர்ச்சி காலத்தில் குரு பகவான் உங்கள் ராசியில் 1, 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். கேது 4 மற்றும் 3ஆம் வீட்டிலும் ராகு 1௦ மற்றும் 9ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பார்கள். இந்த இரண்டரை ஆண்டுகள் உங்களது வளர்ச்சி மெதுவாக இருந்தாலும் அது சிறந்ததாகவே இருக்கும். எனினும் இந்த இரண்டரை ஆண்டு சனி பெயர்ச்சி காலத்தின் முதல் ஒரு வருடம் நீங்கள் சிறிது கசப்பான அனுபவங்களை வாழ்க்கையில் காண நேரிடும். அதன் பிறகு உங்களுக்கு பொற்காலம் தான். உங்களது வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியையும் வெற்றியையும் காண்பீர்கள். இந்த சனி பெயர்ச்சி காலத்தில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் வருவதால் நீங்கள் வாழ்க்கையில் நிலை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம், குடும்பம், உத்தியோகம் மற்றும் பண வரவு ஆகிய அனைத்திலும் உங்களுக்கு நல்ல சூழல் ஏற்படும்.