சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி இருக்கு?
சிம்ம ராசிக்காரர்களே!
இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். சந்தோஷம் உண்டாகும். எந்தப் பிரச்சினை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும்.
மேலதிகாரிகள் கொடுத்த வேலையைத் திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பதற்றம் நீங்கும் நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும் பெண்கள் எந்தத் தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அரசியல்வாதிகள் அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளைச் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.
source: dinasuvadu.com