கன்னி ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்.
கன்னி ; உங்கள் ராசியில் சனி பகவான் 3ஆம் வீட்டில் இருந்து 4ஆம் வீட்டிற்கு பெயருகிறார். இது அர்த்தாஷ்டம சனியாகும். மேலும் சனி பகவான் ருன ரோக சத்ரு ஸ்தானம், கர்ம ஸ்தானம் மற்றும் ஜன்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இந்த பெயர்ச்சி கடந்த காலத்தை விட அவ்வளவாக உங்களுக்கு சாதகமாக இல்லை. இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் உங்களுக்கு உடல் ஆரோக்கியம், குடும்பம் மற்றும் உறவுகளுக்கிடையே பல பிரச்சனைகள் அடுத்த இரண்டரை ஆண்டுகாலம் வரலாம். அதனால் கவனம் அதிகம் தேவை.
குரு பகவான் உங்கள் ராசியில் 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் வீட்டில் இந்த இரண்டரை ஆண்டு சனி பெயர்ச்சி காலகட்டத்தில் சஞ்சரிக்க உள்ளார். வரும் மார்ச் 2019 வரை ராகு மற்றும் கேது உங்களுக்கு பல நல்ல பலன்களை தர உள்ளனர். எனினும் அதன் பிறகு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் உங்களுக்கு பிரச்சனைகள் நிகழ தொடங்கலாம். சனி பகவான் அவரது பலன்களை மெதுவாகவே தருவார். வரும் அக்டோபர் 2018 வரை உங்களுக்கு அதிர்ஷ்டம் மிக்க காலமாக இருக்கும். இருப்பினும் அதன் பிறகு நீங்கள் சோதனை காலத்தை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் வரும் அக்டோபர் 2018ற்குள் அணைத்து முக்கிய விசயங்களையும் சரி செய்து அல்லது முடித்து கொள்வது நல்லது. அதன் பிறகு நீங்கள் அர்த்தாஷ்டம சனி காலகட்டத்தை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும்…