கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி ?
கடக ராசிக்காரர்களே!
இந்த வாரம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். தனாதிபதி சூரியனின் சஞ்சாரத்தால் எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தித் தெளிவு ஏற்படும். உடல், ஆரோக்கியம் பெறும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும்.
மரியாதை, அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். பெண்களுக்குத் திறமை வெளிப்படும். கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலைப்பளு குறைந்து காணப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். மாணவர்களுக்கு மனதிலிருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெறப் பாடுபடுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம் | எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வந்து வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சினை தீரும்.
source: dinasuvadu.com