கடக ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்
உங்கள் ராசியில், சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ருன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயருகிறார். இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும். சனி பகவான் கடந்த காலத்தில் உங்களது ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் நீங்கள் அதிகம் வலி மிகுந்த விடயங்களை உங்களது தொழில், மதிப்பு, மரியாதை, உறவுகள் மற்றும் பிற விசயங்களில் அனுபவித்து வந்திருப்பீர்கள். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்திருந்தால் அது உங்களது மன நலத்தையும் பெரிய அளவில் பாதித்திருந்திருக்கும்.ஆனால் தற்போது நீங்கள் சனி பகவானின் பலத்தால் பல நல்ல மாற்றங்களை இந்த சனி பெயர்ச்சி காலத்தில் காணப் போகுரீர்கள். உங்களது மன நலமும் உடல் நலமும் மேம்படும். மேலும் உங்களது பிரச்சனைகளை சமாளிக்க நீங்கள் மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கொள்வீர்கள். மேலும் சனி பகவான் உங்களது ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களது மறைமுக எதிரகளையும் மற்றும் உங்களை சுற்றி நடக்கும் அரசியலையும் அழித்துவிடுவார். இதனால் நீங்கள் உத்தியோகத்திலும் மற்றும் தொழிலிலும் நல்ல வளர்ச்சி காண்பீர்கள்.
குரு உங்களது ராசியின் 4ஆம் மற்றும் 5ஆம் வீட்டில் இந்த சனி பெயர்ச்சி காலத்தி அதிகம் சஞ்சரிப்பார். இதனால் உங்களது வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். உங்களுக்கு பல நல்ல அதிர்ஷ்டம் மிக்க விடயங்கள் உத்தியோகத்தில் நிகழும். மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி காலம் உங்களுக்கு ஒரு பொற்காலம் ஆகும்.
sources; dinasuvadu.com