இந்த வாரம் எப்படி மேஷ ராசிக்காரர்களே !

Default Image
 
மேஷ ராசிக்காரர்களே!
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் ஆட்சி பெற்றிருப்பது பலமாகும். நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும்.அடுத்தவர்களுக்கு உதவப்போய் வீண்பழி ஏற்படலாம். கவனம் தேவை. உங்களை சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாகப் பயணங்கள் ஏற்படலாம்.
குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.  கணவன், மனைவி பரஸ்பரம் அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்கள் சமையல் செய்யும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ், கவுரவம் யாவும் தேடிவரும். கலைத்துறையினருக்கு சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காணக் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள், நீலம் | எண்கள்: 3, 4, 9
பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமை அன்று பூஜித்து வணங்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்