கன்னி ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு எப்படி ? இந்த வார ராசி பலன் ……

கன்னி ராசி நேயர்களே!
இந்த வாரம் தனாதிபதி சுக்கிரனின் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சில் இனிமையும் சாதுரியமும் காரிய சித்தியை அளிக்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பூர்விகச் சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாகப் பணியாற்ற வேண்டும். வர்த்தக ஆணைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம்.
குடும்பத்திலிருப்பவர்கள் உங்களை ஆலோசிக்காமல் முடிவெடுப்பது மன வருத்தத்தைத் தரலாம். பெண்களுக்குப் பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத்துறையினர் மற்றவர்களுக்கு உதவப் போய் வீண்பழி ஏற்படலாம். தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் கருத்துக்களைத் தெரிவிக்கும்போது கவனமாகப் பேசுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, மேற்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 3, 6
பரிகாரம்: புதன்கிழமையன்று அருகில் இருக்கும் காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கும்…
source: dinasuvadu.com
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024