இன்று “புரட்டாசி பௌர்ணமி”கிரிவலம் வர உகந்த நேரம் எப்பொழுது …???
பௌர்ணமி என்றாலே கிரிவலம் தான் ஞாபகத்திற்கு வரும் எல்லோரும் பௌர்ணமி நாட்களில் அருகிலுள்ள பிரதிபெற்ற கோவிலுக்கு கிரிவலம் செல்வர் அவ்வாறு செல்லும் மக்கள் ஒருவித மனஅமைதியை பெற்று நல்ல உடல்நலமும் பெறுவர் என்பது நம்பிக்கை.
அப்படி கிரிவலம் வர மாலை உகந்த நேரமாகும்.அதிகமாக மக்கள் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த மாத புரட்டாசி பவுர்ணமி வருகிற திங்கட்கிழமை காலை 8.02 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 8.45 மணிக்கு திருவண்ணாமலையில் நிறைவடைகிறது.
இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம். இதுவே அங்கு கிரிவலம் வர உகந்த நேரமாகும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU