ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

pratyangira devi

பிரத்தியங்கிரா தேவி– பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம்.

பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் 5 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.நடை திறக்கும் நேரம் காலை 6.30-1.30 . மாலை 3 – எட்டு மணி வரை.

ஆலயத்தின் சிறப்புகள் :

இந்த அம்மன் ராஜகோபுரம் அளவிற்கு உயரமாகவும் ,உக்கிரமாகவும், சிங்க வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.

அம்மனின் உருவம் நரசிம்ம உருவம் போலும் , உடல் பெண் உருவம் கொண்டும், முகம் சிங்கமுகத்துடனும், சிங்க வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். இவரை இந்து சமய வேதமான  அதர்வண வேதத்தில் அதர்வன காளி எனவும் கூறுகின்றனர்.

அம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக அம்மாவாசை,பௌர்ணமி  தினங்களில் சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது .

இந்த யாகத்தில் மிளகாய் கிலோ கணக்கில் போடப்படுகிறது. இந்த சிறப்பு யாகத்திற்கு மிளகாய் வாங்கிக் கொடுப்பதன் மூலம் கண் திருஷ்டிகளை நீக்கி ,எதிரிகளை துவம்சம் செய்யப்படும் அம்மன் எனவும் நம்பப்படுகிறது.

மேலும் பிரத்யங்கிரா தேவியை வீட்டில் வைத்து வழிபடும்போது தன் பக்தர்களுக்கு ஏற்படும் துன்பங்களையும், பயங்களை போக்கி,அவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும் எதிரிகளையும் தும்சம் செய்கிறார் என்றும் நம்பப்படுகிறது .

அதுமட்டுமல்லாமல் பில்லி ,சூனியம்,ஏவல்  தன் பக்தர்களை நெருங்காமல் பாதுகாப்பவள் ஆவார்.  எத்தனையோ உக்கர தெய்வங்கள் இருந்தாலும் இந்த அம்மன் உக்கரத்தின் உச்சம் எனவும் கூறப்படுகிறது.

அம்மனின் வரலாறு:

விஷ்ணு பகவான்  நரசிம்ம அவதாரம் எடுத்து  இரணியனை அழித்த பிறகும்  கோபம் குறையவில்லை. இவரை சமாதானப்படுத்த சிவபெருமான் சரபேஸ்வரராக அவதாரம் எடுத்து அடக்க செல்கிறார் .

அப்போது நரசிம்மர் கண்ட பேருண்டம் என்ற பறவையை உருவாக்கி சரபேஸ்வரருடன் சண்டையிட செய்கிறார் , இதனை அழிக்க சரபேஸ்வரின் நெற்றியில் இருந்து தோன்றியவர்தான் பிரத்தியங்கிரா தேவி எனவும் வரலாறு கூறப்படுகிறது.

அவ்வாறு தோன்றும்போது இந்த அம்மன் ஆயிரம் சிம்ம தலைகள்  கொண்டும்  2000 கைகளுடனும் தோன்றுகிறார்.

எனவே பயம், கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபாடு செய்தால் விரைவில் இதிலிருந்து விடுபடலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்