வாஸ்துபடி வீட்டில் வளர்க்கக் கூடாத செடிகள், மரங்கள்..! ஏன் தெரியுமா?

சென்னை- வாஸ்து சாஸ்திரப்படி ஒரு சில செடிகளையும் மரங்களையும் வீட்டிற்கு அருகில் வளர்க்கக்கூடாது என கூறப்படுகிறது. அதற்கான காரணங்களை இந்த ஆன்மீகத் தொகுப்பின் மூலம் அறியலாம்.
வாஸ்து சாஸ்திரப்படி ஒரு சில மரங்களை வீட்டில் வளர்க்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது ஏனென்றால் அது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் .. மேலும் அகத்தியர் தனது பாடலின் மூலமும் கூறுகிறார்.
பருத்தி, அகத்தி ,பனை, நாவல் ,அத்தி, எருக்கு, வெள்ளருக்கு, புளிய மரம், கருவேலன், முருங்கை, கல்யாண முருங்கை, கள்ளி, கரு ஊமத்தை, இலவம், வில்வம், உருத்திராட்சம், உதிர வேங்கை, போன்ற மரங்களை வீட்டில் வளர்க்க கூடாது என அகத்திய முனிவர் கூறுகிறார்.
அகத்தி மரம்;
அகத்தி மரத்தில் அதிக அளவு பூக்கள் பூக்கும் , இது எப்பொழுதுமே உதிர்ந்து கொண்டே இருக்கும் இதனால் சுத்தம் செய்வதில் சிரமம் ஏற்படும்.அவ்வாறு நாள் முழுவதும் சுத்தம் செய்வதால் உடல் அசதி ஏற்படும் .
இலவம் பஞ்சு;
இலவம் பஞ்சு வீட்டில் வைத்தால் அது காற்றின் மூலம் பறக்கத் துவங்கும் .இதனை சுவாசிக்கும் போது ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
ஊமத்தம் பூ;
ஊமத்தம் பூ மனநல கோளாறு மற்றும் மனக்குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாகும் ,வீட்டில் வைத்தால் குழந்தைகள் தெரியாமல் அதை சாப்பிட்டு விடுவார்கள் அதனால் தான் கூறப்படுகிறது.
எருக்கன் செடி;
எருக்கன் செடியில் விஷ தன்மை உள்ளது .இதனால் வீட்டில் உள்ளவர்களோ ,குழந்தைகளுக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அவ்வாறு கூறப்பட்டுள்ளது.
புளிய மரம்;
புளிய மரம் அடர்ந்து காணப்படும் .மரம் எப்போதுமே கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளிவிடும் இதை நாம் சுவாசிக்க ஏற்றது அல்ல.
முருங்கை மரம் ;
முருங்கை மரத்தை வீட்டிற்கு முன் வளர்க்காமல் பின்னால் வளர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் முருங்கை கீரை ,காய் என அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது .ஆனால் முருங்கை மரத்தில் கம்பளி பூச்சிகள் அதிகம் வரும் அதே போல் அதன் கிளைகள் எளிதில் உடைய கூடியது.
இலந்தை மற்றும் கள்ளி கற்றாழை செடிகளில் முள் உள்ளது வீட்டில் வைத்தோமே ஆனால் குழந்தைகளுக்கு கை கால்களில் பட்டு அது ஆபத்தை ஏற்படுத்தும்.
மூங்கில் மரம் மூங்கில் மரத்தில் முட்கள் உள்ளது. வெயில் காலத்தில் அதிக வெப்பத்தால் தானாகவே தீப்பற்றிக் கொள்ளும் தன்மையும் இதற்கு உள்ளது.
வில்வம், உருத்திராட்சம் ,உதிரவேங்கை போன்ற மரங்கள் தல விருச்சங்களாக உள்ளது. மேலும் இது புனிதமான மரங்களும் கூட. இதை வீட்டில் வைத்தால் அதன் வேர்கள் வீட்டைச் சுற்றி படர்ந்து வீட்டின் அடித்தளத்தை வலிமையற்றதாக்கிவிடும்.
இது போன்ற பல காரணங்களால் தான் ஒரு சில குறிப்பிட்ட மரங்களையும் செடிகளையும் வீட்டிற்கு முன்னும் வீட்டிற்கு அருகிலும் வளர்க்கக்கூடாது என கூறுகின்றனர் .முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு செயலிலும் ஒரு அர்த்தம் இருக்கும். இது மூடநம்பிக்கை என்று தவிர்த்து விடாமல் அதன் உண்மைகளை ஆராய்ந்து பாருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025