சிவகாசி திருத்தங்கல் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா
சிவகாசி-திருத்தங்கல் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இந்த மாதம் 31ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.வருடம் தோறும் பங்குனி மாதம் பொங்கல் திருவிழா இந்த கோவிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது. மேலும் எட்டாம் நாளில் பொங்கலிட்டு வழிபடுவார்கள்.
மேலும் 9 ஆம் நாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனையும் நடந்து சிறப்பு அலங்கரத்தில் அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஒன்பதாம் நாளில் பக்தர்கள் பொங்கல் வைத்தும் ,அக்னி சட்டி எடுத்தும்,கயிறு குத்தியும்,ஆயிரம் கண் பானை,மற்றும் முளைப்பாரி எடுத்தும் மற்றும் முத்துகாணிக்கை,முடிகாணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்தி கடனை தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
சிவகாசி-திருத்தங்கல் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா இந்த மாதம் 31ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்க இருக்கிறது.இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளவார்கள்.