வியாழக்கிழமையில் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் உச்சரித்து பாருங்கள்..!பணவரவு அதிகரிக்க தொடங்கும்.
வியாழக்கிழமையில் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் உச்சரித்து பாருங்கள்.
வாழ்க்கையில் சிலருக்கு அடிமேல் அடி, சறுக்கல் மேல் சறுக்கல் என வாழ்வை வெறுக்கும் அளவுக்கு நிலைமை இருக்கும். இதுபோன்று உங்களுக்கு பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் இருந்தால் இந்த ஒரு சிவ மந்திரத்தை வியாழக்கிழமையில் சொல்லி வாருங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைக்கூடி வரும். முதலில் வியாழக்கிழமை அன்று காலையில் சுத்தமாக குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். பின்னர் ஊதுபத்தி ஏற்றி வைத்து விட்டு, உங்கள் கைகளில் ஜவ்வாது தேய்த்து கொள்ளுங்கள். நன்கு வாசனையாக உங்கள் இருக்கும்விதத்தில் மனதார உங்கள் குலதெய்வத்தை முதலில் வழிபடுங்கள். உங்கள் மன கஷ்டங்கள், பணக்கஷ்டங்கள் தீர வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். பின்னர் விரிப்பின் மீது அமர்ந்து இந்த மந்திரத்தை 27, 51, 108 என்ற எண்ணிக்கை அடிப்படையில் சொல்லலாம். உங்கள் நெற்றியில் விபூதி பூசி கொள்ளுங்கள்.
சக்திவாய்ந்த சிவமந்திரம்: ஓம் நமோ நமசிவாய சர்வ குபேர வசி வசி வசி ஓம்.
இந்த மந்திரத்தை உச்சரித்து வாருங்கள், உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் சுக்குநூறாகி விடும். மனதார சிவபெருமானை வேண்டி கொள்ளுங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். முக்கியமாக இந்த மந்திரத்தை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கூற வேண்டும்.