பழனி மலை முருகன் சிலையில் மறைந்திருக்கும் நோய் தீர்க்கும் சித்த ரகசியங்கள்..!
சென்னை -அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்று தான் பழனி முருகன் கோவில். இது பல்வேறு அதிசயங்களையும், ரகசியங்களையும் ஒழித்து வைத்துள்ளது என கூறப்படுகிறது .அதிலும் குறிப்பாக பழனி மூலவர் சிலையானது நவபாஷாண சிலையால் உருவாக்க பட்டுள்ளது. இந்த நவபாஷாண சிலை 2800 ஆண்டுகளுக்கு முன் போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் படை வீடாக கூறப்படுவது 695 படிக்கட்டுகள் கொண்ட பழனி மலை கோவிலுக்கு கீழ் இருக்கும் திரு ஆவினன் குடியை தான். பழனி மலை கோவிலுக்கு காலத்தால் முந்தியது இந்த திரு ஆவினன்குடி. திரு முருகாற்றுப்படையில் நக்கீரர் மூன்றாம் படை வீடாக கூறுவது திரு ஆவினன் குடியை தான். அப்போ மலை மேல் இருக்கும் பழனி முருகன் உருவானது எப்படி என பலருக்கும் தோன்றும்.
மலை மேல் இருக்கும் தண்டாயுதபாணி உருவான வரலாறு;
18 சிறந்த சித்தர்களின் ஒருவராக திகழ்ந்தவர் தான் போகர். இவருக்கு தெரியாத கலைகளே இல்லை. போகர் பழனி மலையில் தங்கி மக்களின் நோய்களுக்கு மருந்து கொடுக்கும் பணியை செய்து வந்துள்ளார். அப்போது அவர் கொடுத்த மருந்தால் பலரும் பாதிக்கப்பட்டனர் .இது ஏன் என ஆராய்ந்த போகர், தம்முடைய மூலிகை மருந்தில் உள்ள நச்சுத்தன்மையே இதற்கு காரணம் என கண்டறிந்தார்.
இதனால் அவர் பாஷாண மருந்துகளால் ஒரு சிலையை உருவாக்கி அதற்கு அபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க அவர்களும் குணமாயினர். இதன் பிறகுதான் போகர் நவ பாஷாணங்களை கொண்டு முருகர் சிலையை உருவாக்கி பழனி மலையில் பிரதிஷ்டை செய்து அங்கேயே தங்கி பணி செய்து வந்திருக்கிறார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
நவ பாஷாண சிலை ;
நவ என்றால் ஒன்பது பாஷாணம் என்றால் விஷம் .ஒன்பது விஷங்கள் கொண்டு உருவாக்கப்பட்டது என பொருள்படுகிறது .இந்த நவ பாசன சிலையை 81 சித்தர்களால் செய்யப்பட்டது எனவும் ஒன்பது ஆண்டுகள் வரை எடுத்துக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. போகர் சித்தர் உருவாக்கிய நவபாசன சிலைகள் அறிவியல் தத்துவங்களையும் அடக்கியுள்ளது.
அதாவது சித்தர்களின் கூற்றுப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்க்கும் முறைக்குத்தான் நவபாஷாணம் முறை என்கிறார்கள். சுருக்கமாக கூற வேண்டும் என்றால் விஷத்தை விஷத்தால் தான் முறிக்க முடியும் என்பது போல தான். இன்னும் புரியவில்லை என்றால் நம்மில் பலரும் ஒரு சில பிரச்சனைகளை எதிர் கொள்ளும் போது முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்ற வாசகத்தை கூறுவோம் அதே முறையைத்தான் சித்தர்கள் பின்பற்றி இருக்கிறார்கள். ஆனால் இந்த நவபாஷாண சிலையை பழங்கால சித்தர்களால் மட்டுமே உருவாக்க முடியும்.
இங்கு நவ பாஷாணம் என்று குறிப்பிடப்படுவது சாதி லிங்கம், மனோ சிலை, தாரபாஷாணம் ,வீர பாஷாணம், கந்தக பாஷாணம், பூரம், வெள்ளை பாஷாணம் ,கௌரி பாஷாணம் ,தொட்டி பாஷாணம்.
நவபாஷாணம் தற்போதைய நவீன வேதியல் பெயர்கள்;
- கந்தக பாஷாணம்-Sulfer
- கௌரி பாஷாணம்-Arsenic Pentasulfide
- மனோ சிலை-Arsenic disulfide
- வீர பாஷாணம்-Mercury chloride
- வெள்ளை பாஷாணம்-Asnic
- பூர பாஷாணம்-Mercury
- மற்ற நவ பாஷாணங்களுக்கு சரியான பெயர்கள் கிடைக்கவில்லை என கூறுகின்றனர் .
இப்படி நவ பாஷாணதால் செய்யப்பட்ட சிலைக்கு நவகிரகங்களின் சக்தியை பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு .இவ்வாறு உருவாக்கப்பட்ட சிலைக்கு பல அற்புதங்கள் உள்ளன. இந்த சிலைக்கு பன்னீர் ,சந்தனம் ,பால், பஞ்சாமிர்தம் ,திருநீறு ஆகியவற்றால் மட்டுமே அபிஷேகம் செய்ய வேண்டும் என்ற போகரின் நிபந்தனைகளும் உள்ளது என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மேலும் நவ பாஷாணங்களுக்கு அபிஷேகம் செய்த பொருட்களை சாப்பிட்டால் நோய்கள் தீரும் என சித்தர்கள் கூறுவதோடு பலரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் உள்ளது. இதை அனுபவித்தவர்களும் ஏராளமானோர் அதனால் தான் எப்பொழுதும் பழனியில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கிறது..
இரவு நேரத்தில் தண்டாயுதபாணிக்கு வியர்க்கும் என்று கூறப்படுகிறது. அதனால் பழனி முருகன் சிலைக்கு இரவு நேரத்தில் சந்தன காப்பு சாற்றுவது வழக்கம். அப்போது அந்த நவபாசன சிலையில் இருந்து நீர் வெளியேறும் .இரவில் சிலைக்கு கீழ் ஒரு பாத்திரம் வைக்கப்படுகிறது. அந்த நீர் கௌபீன தீர்த்தம் என்றும் கூறப்படுகிறது.
இரவில் சாற்றப்பட்ட சந்தனத்தில் சிலையில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு அதன் நிறம் பச்சையாக மாறி இருக்கும் ,அதனை காலையில் விஸ்வரூப தரிசனத்தை காண வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும் கௌபீன தீர்த்தத்தமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இது சக்தி வாய்ந்த பிரசாதம் என்று பக்தர்கள் இன்று வரை வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவியலால் கண்டுபிடிக்க முடியாத அபரி விதமான சக்திகள் இவ்வுலகில் இருந்து தான் வருகின்றது. ஒரு நல்ல விஷயத்திற்காக ஆன்மீகமும் தேவை அறிவியலும் தேவை. வருங்காலத்தில் மக்களுக்கு எந்த ஒரு நோய் வந்தாலும் குணப்படுத்தும் மருந்தை கண்டறிய வேண்டும் என போகர் ,அவரின் அறிவாலும் தண்டாயுதபாணியின் அருளாலும் உருவாக்கப்பட்டது தான் நவ பாஷாண சிலை .