கார்த்திகை தீபத்தின் சிறப்பே திருவண்ணாமலை மலை மீது கொப்பரையில் ஏற்றப்படும் மகா தீபம் தான் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருவண்ணாமலை ;மனித பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் தான் வாழ்நாளில் ஒருமுறையாவது கார்த்திகை மகா தீபத்தை பார்த்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் மற்றொரு பிறவி இருக்காது என்றும் நம்பப்படுகிறது. திருவண்ணாமலையின் சிறப்பு என்னவென்றால் மலையை சுற்றி வரும்போது ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு கோணங்களிலும் ஏகன் முதல் அனேகன் வரை ஐந்து விதமான தரிசனங்கள் கிடைக்கும். ஏகன் […]
கார்த்திகை தீபம் வீட்டில் எவ்வாறு ஏற்ற வேண்டும் எந்த எண்ணெய்களை பயன்படுத்தவே கூடாது என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :கார்த்திகை மாதம் என்பது தேவர்களுக்கு அர்த்த ஜாமம் ஆக சொல்லப்படுகிறது .அதாவது விடிவதற்கு முந்திய காலமாகும் .பண்டைய காலத்தில் தீபாவளி கார்த்திகை அன்று கொண்டாபட்டதாகவும் கூறப்படுகிறது . ராமர் வனவாசம் முடிந்து வீடு திரும்பிய போது மக்கள் தீபம் ஏற்றி வரவேற்றதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த திருக்கார்த்திகை அன்று வீட்டில் எத்தனை விளக்குகள் […]
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நாளை நடைபெறுவதையொட்டி மலை உச்சிக்கு கொப்பரை எடுத்துச் செல்லப்படுகிறது. திருவண்ணாமலை ; புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. இதன் உற்சவ நிகழ்வான தீபத்திருவிழா நாளை (டிசம்பர் 13) நடைபெற உள்ளது. நாளை அதிகாலை 4 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டு, பின்பு மாலை 6:00 மணி அளவில் தீப மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. 2668 […]
பரணி தீபம் சிறப்புகள் ,பலன்கள் மற்றும் பரணி தீபம் ஏற்ற வேண்டிய நேரம் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்று பரணி தீபம் .இதை எம தீபம் என்றும் கூறுவதுண்டு . இந்த கார்த்திகை மாதத்தில் பரணி தீபம் ,கார்த்திகை தீபம், பஞ்சராத்திர தீபம் ஆகிய மூன்று நாட்கள் தீபங்கள் ஏற்றப்படுகிறது .அதில் முதலாவதாக ஏற்றப்படுவது தான் பரணி தீபம்.பரணி தீபம் பாவங்களை நீக்கி முன்னோர்களின் […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று [டிசம்பர் 4] கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. திருவண்ணாமலை :திருக்கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம் கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை தீபமாலையானது 2268 அடி உயரம் கொண்டது .கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலை உச்சியில் கொப்பரை கொண்டு சென்று அதில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். […]
கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை கொளுத்த காரணம் என்னவென்றும் மாவலி விளையாட்டின் காரணத்தையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :திருக்கார்த்திகை தினத்தன்று அனைவரது இல்லங்களிலும் விளக்கேற்றி தீபத்திருநாளை கொண்டாடுவது பழங்காலம் முதல் வழக்கமாக உள்ளது . அதேபோல் அன்றைய நாளின் முக்கிய நிகழ்வாக சொக்கப்பன் கொளுத்தும் நிகழ்வும் அனைத்து சிவன் மற்றும் முருகன் ஆலயங்களிலும் வழக்கமாக உள்ளது . அக்னியை கடவுளாக வழிபடும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. திருக்கார்த்திகை என்பது ஒளி வடிவில் இறைவனை […]
துளசி மாலை மற்றும் ஸ்படிக மாலையை பயன்படுத்தும் முறை அதன் நன்மைகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய வழிபாடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் தெய்வீக ஆற்றல் அதிகம் உள்ளது . குறிப்பாக அணியும் மாலை வகைகள் அதீத ஆற்றல் உள்ளதாக நம்ப படுகிறது .அதனால் தான் விரதம் மேற்கொள்ளும் போது மாலை பயன்படுத்தப்படுகிறது . அந்த வகையில் துளசி மாலை மற்றும் ஸ்படிக மாலை மிக உயர்ந்ததாக கூறப்படுவதோடு மட்டுமல்லாமல் பஞ்சபூத […]
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை நோய் என்றால் என்ன ? அம்மை நோயை பலரும் வாழ்வில் ஒரு முறையாவது அனுபவித்திருப்போம். இந்த அம்மையில் பல்வேறு வகை உள்ளது .சின்னம்மை, பெரியம்மை ,தட்டம்மை, பொண்ணுக்கு வீங்கி என கூறிக் கொண்டே செல்லலாம் .இது ஒரு வைரஸ் காரணமாக நம் உடலில் ஏற்படும் நோய் தொற்று என அறிவியல் கூறுகின்றது. மேலும் அதீதமான உடல் […]
சென்னை :திருவண்ணாமலையின் சிறப்புகளும் திருக்கார்த்திகையின் சிறப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய சிறப்புகள் ; திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கூறப்படுகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி ,காசியில் இறந்தால் முக்தி ,காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, தில்லையை தரிசித்தால் முத்தி என்பார்கள் ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி என்று கூறுகின்றார்கள். ஈசன் ஜோதியாக நின்ற ஸ்தலம் இதுவே. பிரம்மா மற்றும் திருமாலின் ஆணவம் அழிந்த இடமாகும் , ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்த […]
சென்னை –ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில் காணலாம். ஐயப்பன் தோன்றிய வரலாறு ; பாற்கடலைக் கடைந்த பின் கிடைத்த அமுதத்திற்காக தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது மகாவிஷ்ணு அழகிய மோகினி அவதாரம் எடுத்து அதை பகிர்ந்து கொடுக்கிறார். மோகினி பார்த்த சிவபெருமான் மோகினியின் அழகில் மயங்கினார். அப்போது இருவருக்கும் ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது .அவரே ஐயப்பன் ஆவார் […]
சென்னை –சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில் அறியலாம் . கார்த்திகை மைந்தன் ஐயப்பன் ; கார்த்திகை மாதம் என்றாலே சிவபெருமானின் தீபத்திருநாள் , முருகப்பெருமானின் கந்த சஷ்டி விரதம் என பல வழிபாடுகள் இருந்தாலும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளே ‘பள்ளிக்கட்டு சபரிமலைக்கு’ என எங்கும் ஒலிக்கும் பாடலை கேட்கலாம்.கலியுக வரதனாக கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்க கூடியவர் தான் சுவாமி ஐயப்பன் […]
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல் ஆரம்பம் ஆகிறது. இன்றைய நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். 48 நாள்கள் விரதத்திற்கு பிறகு இருமுடி கட்டிக்கொண்டு காடு மேடு மலையெல்லாம் கடந்து சபரிமலை நோக்கி பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு சென்று ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு தீராத பிரச்னைகள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம். அதன்படி, கார்த்திகை மாதம் […]
திருவண்ணாமலை –தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது திருக்கார்த்திகை தினமாக கொண்டாடப்படுகிறது . இந்த கார்த்திகை தீபம் மூன்று நாட்கள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.இந்த வருடம் கார்த்திகை மாதம் 28ஆம் தேதி டிசம்பர் 13 2024 அன்று வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை கொண்டாட படுகிறது .அதிலும் குறிப்பாக திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் வெகு விமர்சையாக திருக்கார்த்திகை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் […]
சென்னை –கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் ,கார்த்திகை மாதத்தில் செய்யும் தானங்களின் சிறப்புகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் ; கார்த்திகை மாதம் கருமையான மேகங்களை கொண்டு அதிக மழை பொழியும் கார்காலமாகும். இந்த மாதத்தில் காந்தள் மலர்கள் அதிகம் மலரும் என கூறப்படுகிறது. இந்த கார்த்திகை மாதத்தின் 30 நாட்களும் அதிகாலை நீராடி சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சகலவித நன்மைகளும் மகிழ்ச்சிகளும் கிடைக்கும் என்பது […]
சென்னை –சிக்கல் சிங்கார வேலன் கோவிலின் சிறப்புகளையும் அதிசயங்களையும் இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம். ஆலயம் அமைந்துள்ள இடம் ; நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் சிக்கல் என்ற இடத்தில் நவநீதி ஈஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் நவநீதிஸ்வரராகவும், அம்பாள் வேல்நெடுங்கண்ணி ஆகவும் காட்சியளிக்கிறார்கள். நவநீதிஸ்வரர் வெண்ணெய் பிரான் என்றும் அழைக்கப்படுகிறது. முருகப்பெருமானுக்கு வேல் கொடுத்த நாயகி என்பதால் வேல் நெடுங்கண்ணி என்று அழைக்கப்படுகிறார் .இங்குள்ள முருகன் சிங்காரவேலன் என்று […]
தூத்துக்குடி -கந்த சஷ்டி விழாவானது கடந்த நவம்பர் இரண்டாம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கிய நிலையில் ஆறாம் நாளாளின் முக்கிய நிகழ்வான இன்று மாலை சூரசம்காரம் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக, முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் இன்று மாலை கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்றது. இந்த சூரசம்கார நிகழ்வை ஒட்டி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்பட்டு […]
தமிழகத்தில் அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் குடியிருந்தாலும் திருச்செந்தூர் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக உள்ளது. தூத்துக்குடி –கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு மாலை 4;30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு அனைத்து முருகன் கோவில்களிலும் நடைபெறும். குறிப்பாக திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வை காண குவிந்துள்ளனர். ஏனென்றால் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த இடமாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சூரசம்கார நிகழ்வு அருள்மிகு சுப்ரமணிய சுவாமி […]
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . தூத்துக்குடி -முருகப்பெருமானுக்கு முக்கியமான விரதங்களில் ஒன்று இந்த கந்த சஷ்டி விரதம். மாதம் தோறும் இரண்டு சஷ்டிகள் வந்தாலும் இந்த ஐப்பசி மாதம் வரும் மகா கந்த சஷ்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வருடம் நவம்பர் 2 ம் தேதி சனிக்கிழமை கந்த சஷ்டி விழா தொடங்கியது .அதன் ஆறாவது நாளான நவம்பர் […]
சென்னை -இந்த ஆண்டு அன்னாபிஷேகம் எப்போது அதன் பலன்கள் மற்றும் உருவான வரலாறு பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சிவபெருமானை வழிபட முக்கிய நாட்களாக பிரதோஷம் ,சிவராத்திரி, சோமவாரம் போன்ற தினங்கள் கூறப்படுகிறது. அதேபோல் ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபடுவது சிறப்பாக கூறப்படுகிறது. “சோறு கண்ட இடம் சொர்க்கம்” என ஒரு பழமொழி உள்ளது .இதை பலரும் சோம்பேறிகளுக்காக கூறுவது உண்டு. ஆனால் உண்மையில் என்னவென்றால் இறைவனுக்கு செய்யப்படும் […]
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக துவங்கி உள்ளது. தூத்துக்குடி –கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா துவங்கி உள்ளது . குறிப்பாக முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது .அந்த வகையில் இந்த ஆண்டு இன்று யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி பெருவிழா துவங்கியுள்ளது. இதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் […]