விருச்சக ராசி நேயர்களே !2018 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள்…

Published by
Venu

விருச்சக ராசி நேயர்களே !

தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படுபவர்களே! உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். பணவரவு கணிசமாக உயரும். வருடம் முடியும்வரை சனி 2-ல் அமர்ந்து ஏழரைச் சனியின் இறுதிக் கட்டமான பாதச் சனி தொடர்வதால் எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பைத் தவிர்ப்பது நல்லது.

கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி வந்து போகும். நெருக்கடியான நேரத்தில் உங்களைப் பயன்படுத்தி விட்டு கருவேப்பில்லையாய்த் தூக்கி எறிந்துவிட்ட நண்பர்கள், உறவினர்களை நினைத்து ஆதங்கப்படுவீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கிவைப்பது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும். சாலை விபத்து நேரலாம். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை குரு பகவான் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் வாகனத்துக்கான லைசன்ஸ், இன்சூரன்சைக் குறிப்பிட்ட காலத்துக்குள் புதுப்பிக்கத் தவறாதீர்கள். சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை அசைபோட்டுத் தூக்கத்தைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

பணப் பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி தடைபட்டு முழுமையடையும். ஆனால், 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்திலும் 3.10.2018 முதல் வருடம் முடியும்வரை குரு உங்களுடைய ராசிக்குள் அமர்வதாலும் உறக்கம் வரும். முன்கோபம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுங்கள். குடும்பத்திலும் சிறு சிறு வாக்குவாதங்கள் வந்துபோகும். இந்த 2018-ம் வருடம் முழுக்க ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தையாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அவருடன் கசப்பு ஏற்பட்டு விலகும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் தடைகள் ஏற்படும்.

ஆனால், உங்களுடைய ராசிக்குத் தைரிய ஸ்தானமான 3-ம் இடத்தில் கேது நிற்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். விலையுயர்ந்த மின்னணு, மின்சாரச் சாதனங்கள் வாங்குவீர்கள். வருடப் பிறப்பு முதல் 13.01.2018 வரை சூரியனும் சனியும் சேர்ந்திருப்பதால் முன்கோபத்தால் முக்கியஸ்தர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டுப் பலவீனமடைவதால் சகோதர வகையில் சங்கடங்கள், பணப் பற்றாக்குறை, சொத்துச் சிக்கல்கள், வந்து செல்லும். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்வதால் இளைய சகோதரர் வகையில் ஆதரவு பெருகும்.

அவ்வப்போது களைப்படைவீர்கள். 29.03.2018 முதல் 21.04.2018 வரை சுக்கிரன் 6-ல் மறைவதனால் சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து போக வாய்ப்பிருக்கிறது. ஆனால் 2018-ம் ஆண்டு பிறக்கும் நேரத்தில் சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி பலிதமாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 12-ல் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் சகோதரர் வகையில் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். பழைய சரக்குகளைப் போராடி விற்க வேண்டி வரும். கடையை அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாகப் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் சலசலப்புகள் வரக்கூடும். அதிக சம்பளத்துடன், சலுகைகளுடன் புது வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து ஏற்பது நல்லது.

இந்த 2018-ம் ஆண்டின் பிற்பகுதி சவாலானதாகவும் மையப் பகுதி ஓரளவு வளர்ச்சியையும் முற்பகுதி அதிரடி வளர்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: புதுக்கோட்டையில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு அரியநாச்சி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். இந்தப் புத்தாண்டில் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் தங்கும்.

source: dinasuvadu.com

Recent Posts

நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி…கண்கலங்கிய தந்தை!

நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி…கண்கலங்கிய தந்தை!

மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும்  "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…

3 minutes ago

ஞானசேகரன் குறித்து மா. சுப்பிரமணியன் ஏன் விளக்கமளிக்கவில்லை? அண்ணாமலை கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…

4 minutes ago

ராமதாஸ் – அன்புமணி மோதல் : “எல்லாம் சரியாகிவிடும்”..எம்.எல்.ஏ.அருள் பேச்சு!

சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…

53 minutes ago

தந்தை ராமதாஸ் உடன் வார்த்தை மோதல்! பனையூரில் தனி அலுவலகம் தொடங்கிய அன்புமணி!

விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…

2 hours ago

வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

2 hours ago

விடைபெற்றார் மன்மோகன் சிங்….21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…

3 hours ago