நவராத்திரி ஸ்பெஷல்..புதுசா கொலு வைக்கப் போறீங்களா?. அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

நவம் என்றால் ஒன்பது  மற்றும் புதுமை என்று பொருள். ஒன்பது ராத்திரிகள் அம்பிகைக்காக கொலு வைத்து கொண்டாடப்படுகிறது.

kolu bommai (1)

சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு  வைப்பது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நவம் என்றால் ஒன்பது  மற்றும் புதுமை என்று பொருள். ஒன்பது ராத்திரிகள் அம்பிகைக்காக கொலு வைத்து கொண்டாடப்படுகிறது. அம்பிகை மகிஷா சூரனை வதம் செய்த காலம் தான் இந்த நவராத்திரி ஆகும். அதை நினைவு கூறும் வகையில்   ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கொலு வைக்கும் முறை;

சிலர் பாரம்பரியமாகவே கொலுவைத்து  கொண்டாடுவார்கள். சிலர் புதிதாக கொலு வைத்து கொண்டாட நினைப்பார்கள் .கொலு  வைப்பதற்கு 3 படிகள், 5  படிகள், 7, 9, 11 என படிகளில் வைக்கலாம் .இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது .படிப்படியாக மனிதனின் வாழ்க்கை உயருகிறது என்பதைக் குறிப்பதும், படிப்படியாக உயிரினங்கள் எப்படி தோன்றியது என்பதை குறிப்பதற்காகவும், மனிதன் உயர வேண்டும் என்றால் படிப்படியாகத்தான் கடந்து செல்ல வேண்டும் போன்ற வாழ்வியல் நெறிகளை உணர்த்தும் வகையில் கூறப்படுகிறது. கொலு வைக்கும் போது கிழக்கு திசை நோக்கி அல்லது வடக்கு பக்கம் வைக்க வேண்டும்.

கொலுவில்  வைக்க வேண்டிய பொம்மைகள்;

  • முதல் படி -ஓரறிவு உயிரினங்கள் – புல் ,செடி ,கொடி பொம்மைகள்.
  • இரண்டாம் படி -இரண்டறிவு உயிரினங்கள்- நத்தை, சங்கு பொம்மைகள்.
  • மூன்றாம் படி- மூன்று அறிவு உயிரினங்கள் -எறும்பு, கரையான் பொம்மைகள்.
  • நான்காம் படி -நான்கறிவு உயிரினங்கள்- வண்டு, நண்டு பொம்மைகள்.
  • ஐந்தாம் படி- ஐந்தறிவு உயிரினங்கள்- பறவை ,ஆடு மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள் .
  • ஆறாம் படி -ஆறறிவு உயிரினம்- மனித பொம்மைகள் ,மரப்பாச்சி பொம்மைகள்.
  • ஏழாம் படி -சாய்பாபா, ராகவேந்திரா போன்ற மகான்கள் மற்றும் சித்தர்களின் பொம்மைகள்.
  • எட்டாம் படி -அஷ்ட லட்சுமி, இறைவனின் அவதாரங்கள் ஆன தசாவதாரம்.
  • ஒன்பதாம் படி முப்பெரும் தேவிகள் மற்றும் பிரம்மா, விஷ்ணு ,சிவன் , விநாயகர் மற்றும் பூரண கலசமும் வைத்துக் கொள்ளலாம். பூரண கலசத்தை சிலர் முதல் படியிலும் வைப்பது உண்டு .

கொலு வைக்கும் போது மேல்படியில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் 5 படிகள் தான் வைக்கிறீர்கள் என்றால் மேல்படியில் முப்பெரும் தேவிகள்  மற்றும் சிவன், பிரம்மா ,விஷ்ணு ஆகியோரின் சிலையிலிருந்து ஆரம்பித்துக் கொள்ளலாம். கலசம் முன்பு விளக்கேற்றி ,மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

இந்த கலசத்திற்கு விஜயதசமி வரை பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.. இந்த பத்து நாட்களும் நெய்வேத்தியங்கள் வைத்து பாடல்களைப் பாடி தீப தூப ஆராதனைகளை செய்ய வேண்டும் மேலும் வீட்டிற்கு வரும் உறவினர்கள் சுற்றத்தாரர்கள் , நண்பர்களுக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டும். நெய்வேத்தியமும் கொடுக்க வேண்டும்.

தாம்பூலம் கொடுப்பது மிகச் சிறப்பாக கூறப்படுகிறது. ஏனெனில் தாம்பூலத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு தாம்பூலம் கொடுக்கும் போது மகாலட்சுமியின்  ஆசி நம் வீட்டில் பரிபூரணமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஆகவே கொலு வைத்து நவராத்திரியை கொண்டாட நினைப்பவர்கள் வீட்டில் செய்து வழிபடலாம்.கொலு  வைக்க முடியாதவர்கள் கோவிலுக்குச் சென்று வைக்கப்பட்டிருக்கும் கொலுவினை  வழிபட்டு அம்பிகையை  மனதார வேண்டி அவரின் பரிபூரண ஆசியைப் பெற்றுக் கொள்ளுங்கள் .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்