கன்னியகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று நாகர்கோவில் நாகராஜா கோவில்.
இக்கோவிலனது நாகதோஷ பரிகார தலமாக விளங்குகிறது.மேலும் இந்த கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.மேலும் இக்கோவிலில் தை திருவிழாவானது ஆண்டு தோறும் 10 நாட்கள் படு சிறப்பாக கொண்டாடப்பட்டும்
அதன்படி இந்த ஆண்டுக்கான தை திருவிழாவானத்து கடந்த 13 தேதி அன்று கொடியேற்றத்துடன் வேகுஸ் சிறப்பாக தொடங்கியது.கொடியேற்ற விழாவை முன்னிட்டு தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு,சுவாமி வாகனத்தில் எழுந்தருளல் மற்றும் மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, சொல்லரங்கம் என்று வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது நேற்று நடைபெற்றது.காலை 9 மணிக்கு நடந்த தேரோட்டத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான தளவாய் சுந்தரம் மற்றும் கன்னியகுமரி மாவட்ட நீதிபதி கருப்பையா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏவான சுரேஷ்ராஜன் மேலும் மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் உள்ளிட்டோர் தேரை வடம் தொட்டு இழுத்து தொடங்கி வைத்தனர்.
தேரானது மக்கள் வெள்ளத்தில் தெற்குரதவீதி, மேற்கு ரதவீதி மற்றும் வடக்கு ரதவீதி வழியாக பவனி வந்து மதியம் 2 மணியளவில் கிழக்கு ரதவீதியில் உள்ள நிலையை வந்து அடைந்தது. தை தேரோட்டத்தின் போது கூயிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.தை தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் கலையரங்க மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஆன்மிக சொற்பொழி மற்றும் 8.15 மணிக்கு இசை பட்டிமன்றமும் ,சரியாக 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவிழாவின் கடைசி நாளான இன்று அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் மாலை 5 மணியளவில் சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளளும் சரியாக மாலை 6.30 இரவு 8 மணி வரை சிறப்பு ஆன்மிக சொற்பொழிவும் ,இரவு 8.15 மணிக்கு நகைச்சுவையுடன் கலந்த சிந்தனை பட்டிமன்றமும இரவு 9.30 மணிக்கு ஆறாட்டுத்துறையில் இருந்து சுவாமி கோவிலுக்கு எழுந்தருளலும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.இந்நிலையில் நாகராஜா கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருந்தது. மாவட்டம் முழுவதும் இதனால் ஏராளமான பக்தர்கள் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து தரிசனம் செய்தனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…